Total Pageviews

Wednesday, September 17, 2008

ராசி பலன்.

எனக்குப் பொதுவாக ராசிபலன், ஜோதிடம் போன்றவற்றில் அதிக அளவு நம்பிக்கை உண்டு. நான் தினமும் அதிகாலை தொலைக் காட்சியில், மற்றும் தின, வார, மாத இதழ்களில் வரும் ராசி பலன்களைப் பார்த்து, படித்து பின் பற்றுவது வழக்கம். உதாரணத்துக்கு இன்று என்ன கலர் அதிர்ஷ்டம் என்று சொல்லப் படிகிறதோ அந்த வண்ண ஆடைகளை அணிவது என் வ்ழக்கம். மேலும் அன்று பெண்களால் சிக்கல் வரும் என்று சொன்னால் வழியில் ‘
லிப்ட் ' கேட்கும் பெண்களுக்கு நிற்க மாட்டேன். அலுவலகத்தில் “பெண்களைப் ‘பாரா மடந்தையாக இருப்பேன்.

இந்த வாரம் இரண்டு வேறு இதழ்களில் ஒரே கால அளவுக்கான என் பணி குறித்து வந்த ராசி பலன் இதோ.

இரண்டுமே 'கு' வில்தான் ஆரம்பிக்கும்.இரண்டுமே வார இதழ். ஒன்று ஜோதிடத்திற்கென்றே வரும் வார இதழ்.

ஒன்றில்-' இந்தக் கால கட்டத்தில் பணியில் பதவி உயர்வும், கூடப் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும், நல்ல முன்னேற்றமும், சம்பள உயர்வும், மதிப்பும் கூடும்' என்று போகிறது.

மற்றொன்றில்- 'பணியில் சிக்கல் மிகுந்த காலம் இது. உயர் மற்றும் சக பணியாளர்களின் எதிர்ப்புக்கு உள்ளாவீர்கள். அலுவல்கத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது' என்ற ரீதியில் போகிறது.

இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது- ஒரு முறை ஒரு பிரபலமான தொலைக் காட்சிக்கு தினசரி ராசி பலன் எழுதிக் கொடுக்கும் ஒரு பிரபல ஜோதிட சிகாமணி, பூஷண் இன்னும் என்ன எல்லாமோ போட்டிக் கொள்வார்-இவரும் பல முறை தொலைக் காட்சிகளில் வந்து உள்ளார்- இரவில் எங்களுடன் ஒரு முறை ‘தண்ணி' அடித்து விட்டு மட்டையாகி விட்டார். அதிகாலையில் அவரின் மொபைலில் அந்தத் தொலைக் காட்சியில் இருந்து அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் மனுஷன் அசைய வில்லை. எனக்கு 'இன்று' அந்தத் தொலைக் காட்சியில் எப்படி தினப் பலன் சொல்லப் போகிறார்கள் என அறியும் ஆவல் கூடிக் கொண்டே இருந்தது. அந்த நேரமும் வந்தது. வழக்கம் போல ராசி பலன்களும் சொல்லப் பட்டன. அப்போதும் அந்தக் ‘காலத்தைக் கணிக்கும் கனவான்' முழிக்க வில்லை. அவர் எழுந்தவுடன் ஆவல் தாளாது கேட்டேன்.

”'Crisis Management' என்று கேள்விப் பட்டது இல்லையா? Very Simple. முந்தின தினங்களில் வேறு ஏதேனும் ராசிக்கோ, நட்சத்திரத்திற்கோ உள்ள பலனை மாற்றி வசித்து விட வேண்டியதுதான்.?”

“பின் உமக்கு எதற்கு சம்பளம் கொடுத்து வைக்க வேண்டும்?”

“அடி மடியிலேயே கை வைக்கிறாயே?”

“இல்லை சின்ன சந்தேகம் ...அதுதான்..” என்று இழுத்தேன்.

”ப்ராண்ட் அம்பாசிடர் கேள்விப் பட்டு இருக்கிறாயா. அது மாதிரி என்று வைத்துக் கொள்ளேன்.'

என் குறிப்பு- அது போகட்டும். எந்த ‘கு' வை நம்புவது?எந்த ‘கு' வை நமபாமல் இருப்பது? இதை பிழைத் திருத்தம் செய்கையில்தான் கவனித்தேன்.'கு' க்குப் பதில் 'கூ' என்று இருந்ததை. கவனிக்காமல் பதிவேற்றம் செய்து இருந்தால் 'அனர்த்தம்' ஆகி இருக்கும் இல்லையா?
எனக்கு நேரமே சரி இல்லை என எண்ணுகிறேன்.




2 comments:

K R Mani said...

Very average post. try avoid these sort of one..

Ramesh said...

I have also met many Astrologers in my lifetime and never felt satisfied.

It is easy to preach than to do!