Total Pageviews

Friday, September 26, 2008

காமப் பெரு மூச்சுஒரு துளி.
ஓராயிரம் மீன் குஞ்சுகள்.
ஒன்று மட்டும்
முட்டி மோதி ஜெயிக்கிறது.
காலத்தின் ஜனனம்.
ஒரே உணர்வு.
ஓராயிரம் ஏக்கங்கள்.
ஒன்று கூட
கிட்ட வில்லை நேரத்தில்.
காமத்தின் மரணம்.

Wednesday, September 17, 2008

ராசி பலன்.

எனக்குப் பொதுவாக ராசிபலன், ஜோதிடம் போன்றவற்றில் அதிக அளவு நம்பிக்கை உண்டு. நான் தினமும் அதிகாலை தொலைக் காட்சியில், மற்றும் தின, வார, மாத இதழ்களில் வரும் ராசி பலன்களைப் பார்த்து, படித்து பின் பற்றுவது வழக்கம். உதாரணத்துக்கு இன்று என்ன கலர் அதிர்ஷ்டம் என்று சொல்லப் படிகிறதோ அந்த வண்ண ஆடைகளை அணிவது என் வ்ழக்கம். மேலும் அன்று பெண்களால் சிக்கல் வரும் என்று சொன்னால் வழியில் ‘
லிப்ட் ' கேட்கும் பெண்களுக்கு நிற்க மாட்டேன். அலுவலகத்தில் “பெண்களைப் ‘பாரா மடந்தையாக இருப்பேன்.

இந்த வாரம் இரண்டு வேறு இதழ்களில் ஒரே கால அளவுக்கான என் பணி குறித்து வந்த ராசி பலன் இதோ.

இரண்டுமே 'கு' வில்தான் ஆரம்பிக்கும்.இரண்டுமே வார இதழ். ஒன்று ஜோதிடத்திற்கென்றே வரும் வார இதழ்.

ஒன்றில்-' இந்தக் கால கட்டத்தில் பணியில் பதவி உயர்வும், கூடப் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும், நல்ல முன்னேற்றமும், சம்பள உயர்வும், மதிப்பும் கூடும்' என்று போகிறது.

மற்றொன்றில்- 'பணியில் சிக்கல் மிகுந்த காலம் இது. உயர் மற்றும் சக பணியாளர்களின் எதிர்ப்புக்கு உள்ளாவீர்கள். அலுவல்கத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது' என்ற ரீதியில் போகிறது.

இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது- ஒரு முறை ஒரு பிரபலமான தொலைக் காட்சிக்கு தினசரி ராசி பலன் எழுதிக் கொடுக்கும் ஒரு பிரபல ஜோதிட சிகாமணி, பூஷண் இன்னும் என்ன எல்லாமோ போட்டிக் கொள்வார்-இவரும் பல முறை தொலைக் காட்சிகளில் வந்து உள்ளார்- இரவில் எங்களுடன் ஒரு முறை ‘தண்ணி' அடித்து விட்டு மட்டையாகி விட்டார். அதிகாலையில் அவரின் மொபைலில் அந்தத் தொலைக் காட்சியில் இருந்து அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் மனுஷன் அசைய வில்லை. எனக்கு 'இன்று' அந்தத் தொலைக் காட்சியில் எப்படி தினப் பலன் சொல்லப் போகிறார்கள் என அறியும் ஆவல் கூடிக் கொண்டே இருந்தது. அந்த நேரமும் வந்தது. வழக்கம் போல ராசி பலன்களும் சொல்லப் பட்டன. அப்போதும் அந்தக் ‘காலத்தைக் கணிக்கும் கனவான்' முழிக்க வில்லை. அவர் எழுந்தவுடன் ஆவல் தாளாது கேட்டேன்.

”'Crisis Management' என்று கேள்விப் பட்டது இல்லையா? Very Simple. முந்தின தினங்களில் வேறு ஏதேனும் ராசிக்கோ, நட்சத்திரத்திற்கோ உள்ள பலனை மாற்றி வசித்து விட வேண்டியதுதான்.?”

“பின் உமக்கு எதற்கு சம்பளம் கொடுத்து வைக்க வேண்டும்?”

“அடி மடியிலேயே கை வைக்கிறாயே?”

“இல்லை சின்ன சந்தேகம் ...அதுதான்..” என்று இழுத்தேன்.

”ப்ராண்ட் அம்பாசிடர் கேள்விப் பட்டு இருக்கிறாயா. அது மாதிரி என்று வைத்துக் கொள்ளேன்.'

என் குறிப்பு- அது போகட்டும். எந்த ‘கு' வை நம்புவது?எந்த ‘கு' வை நமபாமல் இருப்பது? இதை பிழைத் திருத்தம் செய்கையில்தான் கவனித்தேன்.'கு' க்குப் பதில் 'கூ' என்று இருந்ததை. கவனிக்காமல் பதிவேற்றம் செய்து இருந்தால் 'அனர்த்தம்' ஆகி இருக்கும் இல்லையா?
எனக்கு நேரமே சரி இல்லை என எண்ணுகிறேன்.
Friday, September 12, 2008

பீஜம் சின்னது - உருவான கதை ( MAKING OF -PEEJAM SINNATHU)


அவனால் எனக்குப் பிரச்சனை வராத நாள் இல்லை. ஆனால் இந்த முறை இந்த ரூபத்தில் வரும் என எண்ணவில்லை.
நான் பதிவுகளுக்கு வழக்கமாக முன்,பின் அல்லது என் குறிப்புகள் போடுவது வழக்கம். நான் செய்த ஒரே தவறு 'பீஜம் சின்னது' 'அவனுடைய' முயற்சி என்பதைப் போட மறந்து விட்டேன். நேற்று நண்பர் 'ரமணி' வீ ட்டுக்குச் சென்ற போது என்னைத் தனியாக அவரது சகோதரர் அழைத்து 'உங்கள் பீஜம் சின்னதா? எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் உள்ளார்' என்ற ரீதியில் ஆரம்பித்து விட்டார்.எனக்குத் தர்ம சஙகடம் ஆகி விட்டது. 'இல்லை ஐயா .எனக்குத் தேவையான அளவு வளர்ந்து உள்ளது' எனத் திறந்து காண்பிக்கவா முடியும்?
அவன் இன்று வந்தவுடன் மேற்கண்ட நிகழ்வைச் சொல்லி அவனிடம் கேட்டேன்.
” ஏன் இந்த விபரீத முயற்சி மேற் கொள்கிறாய்?பேசாமல் 'ஜ்வரோம் சுந்தருக்கு' ஒரு அதீதன் போல எனக்கு நீ இருந்து விட்டுப் போயேன்? கதைகளை, நிகழ்வுகளை மட்டும் சொல்லி விட்டுப் போயேன். நாங்கள் எழுதிக் கொள்கிறோம்.'
‘ஏன் என்னால் எழுத முடியாதா? உனக்குப் பொறாமையா?'
இவனுடன் பேச முடியாது.' சரி உன் சொந்த அனுபவமா அது?' என்றேன்.
” நீங்கள் எல்லாம் சொந்த அனுபவத்தைதான் எழுதுகிறீற்களா? நீ ‘
ராஸ லீலா' தந்தாய் அல்லவா? அதைப் படிக்கையில் 'பீஜம் சின்னது' என இரண்டு இடத்தில் வரும். சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் படித்த உடன் ‘பச்சக்கென' மனதில் ஒட்டிக் கொள்ளும். உள்ளூர் தமிழ் பேப்பர் ஞாயிறு அன்று வாங்கிப் படித்தேன்.குறியை நீட்ட, உச்சம் அதிகரிக்க, கள்ளக் காதலை விடுவிக்க, வசியம் வைக்க இப்படி ஏகப் பட்ட விளம்பரங்கள். இரண்டு புள்ளிகளையும் இணைத்தேன். அவ்வளவுதான்.'
‘சரி' என்றேன்.
திடீரென நினைவுக்கு வந்தவனாக 'உனக்கு பீஜம் எப்படி?' என்றான்.
‘இப்ப ரொம்ப அவசியம் இது. நான் பிரம்மச்சாரி எனபதையும் இன்னும் கன்னி கழியாதவன் என்பதையும் மறந்து கிளறுகிறாய். உன் போல பூத்த முல்லையோ இல்லை ஒரு பூசணிக்காயோ இல்லை முதிர் கன்னியோ இல்லை முட்டைக் கோஸோ முதலில் கிடைக்கட்டும். அப்புறமாய் என் விஷயம் பற்றிச் சொல்கிறேன்' என்றேன் எரிச்சலுடன்.
அப்புறமாக பல விஷயங்கள் பேசி விட்டு கிளம்புகையில் கேட்டான்.'இதை பதிவேற்றம் செய்யப் போகிறாயா?'
‘செய்யலாம் என்று இருக்கிறேன்.'
‘என்ன தலைப்பு வைக்கப் போகிறாய்?'
‘இன்னும் யோசிக்கவில்லை.'
‘பேசாமல் MAKING OF PEEJAM SINNATHU' என்று வைத்து விடேன்.'
நான் மவுனமாக முறைத்துப் பார்த்தேன்.
‘ஏன் ரஜினி, கமல், சங்கர் படங்களுக்கோ இல்லை பிரபல ஆங்கிலப் படங்களுக்கோ மட்டும்தான் Making of இருக்க வேண்டுமோ?'என்று கூறி விட்டுக் கிளம்பினான்.