Total Pageviews

Thursday, July 31, 2008

பிறன்மனை

"நீ சொல்லுவது எல்லாம் பிறன் மனைவிகளைப் பற்றியதாய் உள்ளதே என்பதுதான் என் தயக்கம்."என்றேன் அவனிடம்.

" மூடனே அவர்கள் எல்லாம் என்னுடைய முன்னாள் காதலிகள். நாங்கள் கிட்டத்தட்டக் கணவன் மனைவி போன்று வாழ்ந்தவர்கள். நீ குற்றம் சாட்ட வேண்டும் என்றால் இப்போதைய கணவன்மார்களைத்தான் சொல்ல வேண்டும்." இது அவன்.

" அதோடு நாங்க எல்லாம் சின்ன வயதிலியே 'கம்பராமாயணம்' படித்து வளர்ந்தவர்கள்" என்று கிட்டத் தட்ட ‘வடிவேலு’ பாணியில் கூறினான்."அதன்படி நடக்கவும் செய்கிறோம்".

ஆச்சர்யத்துடன் "கம்பர் அப்படி என்ன சொல்லி வைத்து விட்டு சென்று உள்ளார்?" என்றேன்.

" பிறன்மனை நோக்கப் பேராண்மை வேண்டும்".ஒரு கணம் அதிர்ந்து விட்டேன்.

" அடப் பாவி அது பிறன் மனை நோக்காப் பேராண்மை வேண்டும்".

" கம்பர் கால்வாங்கு விஷயங்களில் 'வீக்' என்பது உனக்குத் தெரியாது"

என் குறிப்பு-
அவனுக்குத் தமிழ் சரியாகப் படிக்கத் தெரியாது என எனக்குத் தெரியும். அதற்காக அது அவனது வாழ்க்கையில் இப்படி விளையாடும் என எண்ணவில்லை.

1 comment:

K R Mani said...

நோக்காப் பேராண்மை வேண்டும்".
Seems spelling mistaken.. nookap.. illayai.. it should be noka