Total Pageviews

Monday, July 14, 2008

கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை


கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை

முன் குறிப்பு
1) இந்த முன் குறிப்பும்,பின் குறிப்பும் மட்டுமே என்னுடைய பங்களிப்பு. மற்ற எல்லாம் 'கதை சொல்லி' சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு தவளை இருந்ததாம். அதுக்கு அஞ்சாறு குட்டித் தவளைங்களாம்.அந்த ஊர்ல ஒரு அழகான குளம் இருந்துதாம். அதுலதான் பெரும்பாலும் இந்தத் தவளைக் குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்துதாம்.அந்தக் குளத்திலே தண்ணி இனிச்சுக் கொட்டுமாம்.அந்த ஊர்ல குளிக்க, துவைக்க,வீட்டுக்கு தண்ணி 'மோள' எல்லாமே அந்தக் குளத்துலதான்.நல்ல மனசுக்காரங்க மட்டும்” வவ்வாத் தோப்பில” கொல்லைக்கு இருந்துட்டு,பக்கத்து “ செம்பேத்து மடையில ” குண்டிகளுவுவானுங்க.சில கூறு கெட்ட கூமுட்டைங்க அதையும் இந்தக் குளத்திலே பண்ணுவானுங்க.

ஊருல முக்கா வாசிப் பேரு அந்தக் குளத்துல தான் மேல சொன்ன காரியங்களப் பண்ண வருவாங்க.அந்தக் குளத்துப் பக்கத்தில ஒரு ஒசரமான மருத மரம் இருந்தது. அந்தக் குளத்து ஒரு கரையில சிவன் கோயிலும், மறு கரையில பெருமாள் கோயிலும் இருந்தது. நடுவில “ சுப்ப மொட்டை” பாலம் பாதி இடிஞ்சு இருந்தது. அனேகமா நாலு இல்ல அஞ்சுவீட்டுக்குப் பின்னால “ படித்துறை “ உண்டு.விளங்காத ” மக்கா ” மாருங்க பாதி நேரம் குளத்துலதான் கிடப்பாங்க. குதிக்க வசதியா சறுக்கு ஒவ்வொரு படித்தொறையிலும் இருக்கும்.அந்த மருத மரம் ஏறிக் குதிக்கப் ”பார்ட்டிகள்” உண்டு.பொதுவா சூரியன் உச்சிக்கு வருதக்கு முன்னாடி ஒரு பதினோறு மணிவாக்கில கொமரிப் பொண்ணுங்களும், கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாள் ஆன பொம்பளைங்களும் வருவாங்க. அப்பக் களை கட்டும் பாருங்க. இள வட்டப் பசங்க அந்த நீச்சல், அந்தப் பாய்ச்சல் அப்படினு.அந்தத் தவளைங்க அவனுக இருக்க பக்கமே பயத்துல தலை வைக்காது.

சிவன் கோவில் கரையில் இருந்து பெருமா கோவில் கரைக்கு நீச்சப் போட்டி நடக்கும்.கெதி உள்ளவன் ஒரே ' தம்' கட்டி பெருமா கோவில் கரைக்குப் போயிருவான்.கொஞ்சம் திவங்கினவன் “ சுப்ப மொட்டை பாலத்துல ” ஒக்காந்து அப்புறமாப் போவான்.சீத்துவம் செத்தவன் அந்தப் பாலத்தோட திரும்பிருவான்.ஆனா எவன் ஒரே மூச்சுல பெருமா கோவிலுக்குப் போறானோ அவனுக்குத்தான் பொட்டப்புள்ளைங்க ஓரப் பார்வை கிடைக்கும். நடுவுல ஒக்காந்து போன பயபுள்ளைகளுக்கு ரெண்டாம் எடந்தான். பாதியில திரும்பி வந்த பய புள்ளைகளுக்கு 'டெப்பாசிட்டு' போன கதைதான்.மருத மரத்துல ஏறிக் குதிக்கதுல இன்னொரு சமாச்சாரமும் இருக்கு.தடுப்புக்கு அங்கன பாவாடைய மாரு வரைக் கட்டிக் குளிக்க பொம்பளைகளைப் பாக்கலாம்.அவுக வாழத் தண்டு தொடையப் பாக்கலாம். அப்புறமா சாவகாசமா “ மண்டபத்தில் ஒக்காந்து எவளுக்கு எது எது எங்கன எங்கன எப்படி எப்படி இருந்துது" அப்படினு நீட்டி நீட்டிப் பேசலாம். அப்புறமா எவ எவ பாயக் கொண்டாந்து அலசினாங்கிரதை வெச்சு எவ வீட்டுல முந்தின நாள் ‘ கப்ளிங் கச்சேரி’ நடந்துதுனு கண்டு பிடிக்கலாம்.

( ”சரிவே என்னா கத சொல்லுதேரு எங்கன ஆரம்பிச்சீரு? தவளையை எங்கன?”

பயபுள்ள ஒளுங்கா கவனிக்கியளானு பாத்தேன்)

ஒரு நாளைக்கு அந்த சின்னத் தவளைங்க எல்லாம் அம்மா தவளைக்கு “ கடுக்கா” கொடுத்திட்டு குளத்துல தள்ளிப் போய் விளையாடப் போயிருச்சு.வழியில கேட்கப் பட்ட “ தூரமா போதிய?” கேள்விக்கு எல்லாம் “ நாங்க பொம்பளைப் படித்தொறைக்குப் போறோம்”னு சந்தோசமா பதில் சொல்லிச்சு. அப்படியே பொம்பளை குளிக்க படித்தொறை பக்கமாப் போய் விளையாடிது.ரொம்ப நேரம் கழிச்சு உள்ளதிலே பெரிய அண்ணன் தவளை சுத்தி முத்தும் பாக்கையில மூணு தவளைக் குஞ்சுகளைக் காணலை . பரிதவிச்சுப் போச்சு. வீட்டுக்குப் போனா ' ஆத்தா தவளை விளக்குமாத்தை எடுத்து விளாசிப் புடுவாளே'னு பயந்து கடைக்குட்டியுடன் வீட்டுக்கு வந்துச்சு. வாசலுல “ காளி” கணக்கா நின்னுக்கிட்டு” எங்கன போய்த் தொலஞ்சிய..கூறு கெட்ட மூதியளா” னு ரெண்டு போடு போட்டா..அப்பத்தான் கவனிச்சுது மூணு ' கோட்ட்டாங்'களக் காணலின்னு.

“ அந்தக் கூறு கெட்ட கோட்டாங்களை எங்கன ?”

பயத்துல அந்த ரெண்டும் “ ஆத்தா எங்க கூட விளையாடிக்கிட்டி இருந்துச்சு..ஆனா திடீர்னு கண்ணுக்கு தப்பிச்சிருச்சு” சொல்லவும், தாய்த் தவளை ஆரம்பிச்ச ”ஏச்சுமழை ” ஓயவேல்ல.தாய்த் தவளை குட்டிங்க சொன்ன எடம், சொல்லாத எடம் எல்லாம் தேடிப் பாத்து( நீந்திப் பாத்தோ?) சாயங்காலமா வெறுமனே திரும்பி வெசனத்தோட வந்துது.
===============================================
மறு நாளைக்கா சூரியன் உச்சி தாண்டினோன , ‘சவக்களையோட’ தொலஞ்சு போன அந்தத் தவக்களைங்க வந்துது. அதுகளக் கண்டோனதான் தாய்த் தவளைக்கும், மத்தக் குட்டித் தவளைகளுக்கும் உயிரே வந்துது.

தாய்த் தவளை "ராப்போதுவீட்டுக்கு வராமெ எங்கனெ போய் மேஞ்சுட்டு வாரிய?"

மூணு தவளையில மூத்தது “அம்மா விளையாடிகிட்டு இருக்கயில திடீருன்னு பாம்பு வாற மாதிரி சத்தம் கேட்டுது.அப்படியே பயந்து ஓடினோம். ஒரு எடத்துல பாத்தா அப்படி ஒரு பெரிய ரெண்டு தூணப் பாத்தோம் எதுக்க எதுக்கெ. அத்தாம் பெரிய , அத்தாந் தண்டி பாத்ததே இல்லை.நான் சொன்னேன் திரும்பிப் போயிரல்லாம்னு.இவந்தான் தூணுக்குப் பின்னாலெ கொஞ்சம் தள்ளிப் போய்ப் ஒளியாலாம்னான். சரி பயத்தோட போனோம். தூணுக்கு கட்டக்கடைசில ஒரே இருட்டு. அப்புறமா ஒரே புதர் கணக்கா மண்டிக் கிடந்துது. சரின்னு பாத்தா பாம்புசத்தம் பக்கத்துல வார மாதிரி இருந்துது. பயத்துல புதர் பின்னாடி ஒரு 'கொகை' இருந்தது. அதுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டோம். ஆனா ஆழத்தில போய் மாட்டிக்கிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா நாங்க இருந்த கொகை அதிர ஆரம்பிச்சுது.அப்புறமா அந்தக் கொகையே நகந்து போக ஆரம்பிச்சுது. பயத்துல அளுகையே வந்துருச்சு. எப்படித் தப்பிக்கணுமனு தெரியலை. பயத்துலயும், பசியிலயும் தூங்கிப் போயிட்டோம். திடீருனு பாத்தா கொகையத் திறக்கிற மாதிரி ஒரு சத்தம். சரி தப்பிச்சு வெளிய போயிருவ்வோம்னு பாத்தா....கொகை வாசலை அடைச்சிக்கிட்டு ஒரு பெரிய பாம்பு ,' அன கோண்டா' மாதிரி,எங்களை முழுங்க வாயைத் திறந்த்துக்கிட்டு,யம்மா பயத்துல மயக்கமே வந்துருச்சு. நாங்க தப்பிக்க இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி போயிட்டோம். அதுவும் எப்படியாவது உள்ள வந்து எங்களைப் பிடிக்கணும்னு பாத்துது. ஆனா அது முழு உடம்பும் உள்ள வர முடியல. அது பின்னால பின்னால போய் மறு படியும் முன்னால வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துது. கடைசி வர நாங்க எட்டியே நின்னுக்கிட்டோம். கடைசில கோவத்துல விஷத்தக் கக்கிக் கொல்லப் பாத்துது. ”

அம்மாத் தவளை ஆச்சர்யத்துடனும், பயத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தது.

“ சரி .. கொஞ்ச நேரம்”அரவம்” இல்லாம இருந்துச்சு. சரி ஓடியாந்துரலாம்னு பாத்தா மறுபடியும் இன்னோரு பாம்பு. முதப் பாம்பு போய் அனுப்பிச்சிருக்குனு நினைக்கேன். இது அதை விடக் கொஞ்சம் தண்டி சாஸ்தி.அதே மாதிரி இதுவும் உள்ள வரப் பாத்து எங்கள எட்டி எட்டிப் பிடிக்க வந்து முடியா ம கடைசியா விஷத்தைக் கக்கிட்டுப் போய்ருச்சு.இப்படி அதுங்க சொந்தம் அஞ்சு பேரு வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துக் கொல்லப் பாத்தாங்க. கடைசி வரை முடியல”

“ அப்புறம் எப்படித்தான் தப்பிச்சு வந்தீங்க?”

“ ரொம்ப நேரம் கழிச்சு மறு படியும்கொகை நகருத மாதிரியும் , எங்களை யாரோ தூக்கிக்கிட்டுப் போற மாதிரியும் இருந்துச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம குளம் வந்த மாதிரி தோணிச்சு.தண்ணிச் சத்தம் கேட்டுச்சு. என்ன வந்தாலும் பரவாய் இல்லை.. இப்பம் எப்படியாவது தப்பிச்சிரணும்னு கொகை வாசலைப் பாத்தா தொறந்து இருந்தது. எந்த “அரவமும்” இல்ல. தொப்புனு கொகை வாசல்ல இருந்து குதிச்சோம். பாத்தா நம்ம குளம். ஓடி நம்ம வீட்டுக்கு வந்துட்டோம்”

தாய்த் தவளை ” எந்தத் தவளை பிடிக்கறதோ உங்களைப் பிடிச்சுக்கிட்டுப் போய்ருக்கு. யாரு செஞ்ச புண்ணியமோ பத்திரமாத் திரும்பி வந்துட்டீங் க...இனிமே அங்க எல்லாம் போகாதே”னு அதுங்களைக் கட்டிக்கிடுத்து.

பின் குறிப்பு-

1) கதை புரியாதவர்களுக்கான குறிப்பு- முதல் நாளும், இரண்டாம் நாளும் அந்த நேரத்தில் வந்து குளித்தவள் அந்த ஊரின் மிகப் பிசியான விபச்சாரம் செய்யும் “ ஷகீலா “ போன்ற தோற்றம் உடைய ஒரு பெண்.


2) அவள் இரண்டாம் நாள் குளித்து முடிந்து செல்கையில் “நேத்திக்கு குளிக்க வந்ததிலே இருந்து அடி வயத்துக்கு கீள குறு குறுனு இருந்தது இன்னிக்கு குளிச்ச அப்புறமா சரியாயிருச்சு” என்று மு ணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.

3) இந்தக் குறிப்புகளுடன் மறுபடியும் படித்துப் பார்க்கவும்.

4) இன்னும் புரியாதவர்கள் என்னை மன்னிக்கவும் இதை எழுதியதற்காக.

1 comment:

லதானந்த் said...

இயன்றால்
www.lathananthpakkam.blogspot.com
படித்துப்பாருங்கள்
அதில் என் மின்முகவரி இருக்கும்.
முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் எழுத்து என்க்குப் பிdiச்சிருக்கு

word verificationஐ எடுத்துவிடுங்கள்