Total Pageviews

Monday, December 14, 2009

குவார்ட்டர் பாட்டில் ..........பாட்டில் ஆன கதை

அலை பேசி அழைத்தது .கதை சொல்லிதான்.ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான். எனினும் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் எடுத்துப் பதில் சொன்னேன்.

"என்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன் .

"சும்மா நம்ம கிராமத்துல போய் இருந்துட்டு வந்தேன்."

எனக்கு மனதில் உள்ளூற உதறல்தான்.கேட்டே விட்டான்.

"நாம மீட் பண்ணலாமா ?" கேள்வி எழுப்பினான்.

பைக்குள் பார்த்தேன். பணம் இருந்தது ." சரி வா" என்றேன் .

" பார்ட்டி உண்டு இல்லையா ?". இல்லை என்றால் விடப் போகிறாயா என மனத்திற்குள் சபித்துக் கொண்டு " கட்டாயம் " என்றேன் .

வரலாற்று ரீதிக்கு 'வந்தான் வென்றான்' ( அதாங்க நல்லாக் குடித்தான்) . ஓர் அரை பாட்டிலைக் காலி செய்தவுடன் ஆரம்பித்தான் கச்சேரியை.

" கிராமம்னா கிராம்தான் " என ஆரம்பித்தான்,

உடனே " என்னப்பா கிராமம்னா கிராமம்தானே " என்றதற்கு
" என்ன நீ வாங்கிக் கொடுத்ததால நக்கலா ?" என முறைக்கத் துவங்கினான்.

உடனே அவனைக் கூல் செய்யும் விதமாக " இல்லப்பா உன்னை எதிர் பார்த்து வலைப் பூவில் ரசிகர்கள் காத்திகிட்டு இருக்காங்க. அதான் ....."

" அப்படிப் பேசப் பழகு. என் வெயிட் உனக்குத் தெரியும் இல்லே"

மனதிற்குள் உன்னை நான் எப்போது தூக்கிப் பார்த்தேன் என நினைத்துக் கொண்டேன்.

" தெரியாதா..நீ சொல்லு மாப்ளை "

" ஊர் ரொம்பக் கெட்டுப் போச்சு. இம்பூடூண்டு என் 'விர'த் தண்டி இருக்கற பயக்க எல்லாம் குடிக்க ஆரமிச்சுட்டான். நான்லாம் பிளஸ் டூ படிக்கைல ( சந்தடி சாக்குல ஒரு கப்சா ?) மொத மொத குடிக்க ஆரமிச்சேன் பயந்து பயந்து . அதவும் அஞ்சு வருஷம் கட்டிங் தாண்டல.இப்போ எல்லாப் பய புள்ளையும் 'ஹாப்' அடிக்கு. ஏ.. உனக்கு அந்த மண்டபம் தெரியும் இல்ல. அங்கன தெனம் நைட் பாட்டில் பாட்டிலா ஓடுதுடே ."

நிறுத்தி என்னை உற்று நோக்கினான். அதன் பொருள் ' கிளாஸ் காலி ஆயிருச்சு டுபுக்கு ஊத்து' என்பது அவனுடன் பல வருடங்களாகக் குடிக்கும் எனக்குத் தெரியாதா என்ன?

"இந்தப் பயக்க டக்குனு 'ஐட்டி' பாருக்குப் போய் சரக்கு வாங்கிட்டு வந்துருதான். நம்ம " சிங்கம்' இருக்கு பாரு .அதுக்கு இதே வேலைதான் ... ஒவ்வொருத்தனுக்கும் தினம் வாங்கிக் குடுத்திட்டு ஒரு கட்டிங் கமிசன் அடிச்சுருதான்.....".

திடீரென்று அங்கும் எங்கும் பார்த்தவன் " என்ன மாப்ளை தீந்து போச்சா ?" என்றவன் நேராக பிரிட்ஜ் பக்கம் போய் திறந்து உள்ளே உள்ள புது பாட்டிலை எடுத்துக் கொண்டே " ஏன் மாப்ளைனா மாப்ளைதான் எனக்குத் தெரியும் வே..நீர் உள்ள வைச்சு இருப்பீர்னு...இரும் ..ஒரு தம் அடிசுகிடுதேன் "

பற்ற வைத்து ரெண்டு மூன்று இழுப்பு இழுத்து விட்டு பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.எனக்குப் பகீர் என்றாகி விட்டது.

" ஒரு சேதி சொன்னா நீரும் விழுந்து விழுந்து சிரிப்பேறு. நம்ம ஊர்ல ரவுண்ட் ஜட்டி போட்ட பாதி பயக்க ரெண்டு பை வச்ச நீள ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான். ஜட்டி போடாத பயக்க ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான்".

எனக்கு 'என்ன டிராக் மாறுகிறதே...மப்பாகி விட்டானா ' எனத் தோன்றியது . அவனாவது அவ்வளவு சீக்கிரம் மப்பு ஆவதாவது .

"சில சமயம் ரெண்டு மூணு 'கோட்டார்' வாங்க வேண்டி வருதா ....கையில கொண்டு வந்தா சிக்கல்னு ஜட்டி பாக்கெட் உள்ள வச்சுக்கிட்டு வந்துருதானுவே.....ஜட்டி போடலையுனா இடுப்புல சொரிகின
'கோட்டார்' கீழ விழந்தரும்னு ஜட்டி போட்டு அதுல சொருகி எடுத்துக்கிட்டு வாராங்க ...."

"அன்னைக்கு அப்படித்தான் நான் மண்டபத்தில ஏழு மணிக்கு உக்காந்து இருந்தேன். நம்ம 'சிங்கம்' வந்துது. நம்ம 'அடேங்கப்பா' ( பெயர்க் காரணம் - எதற்கு எடுத்தாலும் - அடேங்கப்பா சாப்பாடு என்னமா இருந்துது ...அடேங்கப்பா சினிமா எப்படி எடுத்து இருக்கான் ....அடேங்கப்பா என்னமா இருக்கு முலையும் குண்டியும்.....அடேங்கப்பா என்னமா போடுதான் ( நீலப் படம் பார்க்கையில்)......அடேங்கப்பா 'சிங்கத்துக்கு எம்புட்டு நீளமா கிடக்கு .....இத்யாதி இத்யாதி ) புல் மப்புல இருந்தான். சிங்கம் வந்த உடனே 'ஏல சிங்கம்' மரியாதையா லுங்கிக்கு உள்ள உள்ள 'கோட்டரைக் குடுல ' ன்னான். சிங்கம் 'அண்ணே' ஒண்ணும் இல்லை" ன்னான். இவன் விட மாட்டேங்கான்....'ஏல மரியாதையா அண்ணனுக்குத் தாரியா ..இல்ல "னு லுங்கிய இழுக்கப் போனான். அவன் லுங்கியக் கெட்டியா புடிச்சிகிட்டே ' தூர விடுங்கண்ணே' ன்னான்.இப்படியா பத்து நிமிஷம் இவன் இழுக்க அவன் தடுக்க .....ஒரே களேபரம்தான்."

சொல்லிக் கொண்டே வந்தவன் அமைதியானான். திரும்பிப் பார்தால்
பாட்டிலும் காலி அவனும் காலி.

எனக்கோ கதை பாதியில் நிற்கிறதே என எழுப்ப முயற்சித்தேன் அவனை. முடிய வில்லை. நானும் தூங்கிப் போனேன்

பின் குறிப்பு- காலையில் எழுந்ததும் கண்ணில் பட்டது என் தலை மாட்டில் ஒரு காகிதம்.அதில் - "இப்படி சண்டை அவங்க ரெண்டு பேரும் போட்டதால எனக்கு மண்ட காஞ்சு போச்சு. கோவம் வந்து " ஏல பேக் கூதிபாத்து...பத்து நிமிசமா அங்கனேயே கைய வச்சு நொரை நாட்டியம் பண்ணுதியே....'கோட்டர்' பாட்டில் 'பீர்' பாட்டிலாயிராப் போவுது'னு கிளம்பி வந்துட்டேன்.-என்று எழதி வைத்துப் போய் இருந்தான்.

அவசியம் இல்லாத செய்தி- இடையில் அவன் " தினம் நம்ம கிட்ட ' எழுவது' ரூவாயை வாங்கிட்டு மாசத்துக்கு 'ஒரு ரூவாய்க்கு' அரிசி போடுதான்.அந்த ஒரு ரூவா அரிசியத் தின்னுட்டு கக்கூசுக்குப் போனா நாலு ரூவா கேக்கான்' சொன்ன அரசியல் பொருளாதார சித்தாந்தம் நமக்குத் தேவை இல்லாதது.

Sunday, December 13, 2009

மண்ணுளிப் பாம்பு





என் சொந்த ஊருக்கு சென்று இருந்த போது நல்ல சீசன். குற்றாலம் மற்றும் சுற்றி உள்ள அருவிகளில் நல்ல அருவி. வானம் மப்பும் மந்தாரமுமாக, உல்லாசமாக , ஒயிலாக , குஷியும் குஜாலவுமாக இருந்தது. மாறி மாறி சாரல் இதமான வெயில்.'யான்' பெற்ற இன்பம் என் நண்பர்களும் பெற வேண்டி வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்களுக்கு அலை பேசியில் அழைப்பு விடுத்ததின் பலன் திருப்பூரில் இருந்து நான்கு நண்பர்கள் வரச் சம்மதித்து வந்த உடன் ஆரம்பித்தது ஆட்ட பாட்டம்.

எந்த அருவிக்குப் போகலாம், எத்தனைப் போத்தல்கள் வாங்கலாம் என்று பல யோசனைக்குப் பிறகு அத்தனையும் வாங்கிக் கொண்டு போனால் அந்த அருவிக்கு மேல் செல்ல வனத் துறை அனுமதிக்கவில்லை.
" என்ன மக்கா இப்ப என்ன பண்ணலாம் " வருத்ததுடன் ஒரு நண்பர்.எனக்கு உள்ளூர சந்தோஷம்.என் ஊரில் என் செல்வாக்கைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டேன்.

அலை பேசியை எடுத்து சில எண்களை அழுத்தினேன்.அதிர்ஷ்டம் அந்த அழைப்பில் இருந்தது.என் காவல் துறை நண்பன் சீசன் பணிக்கு வனத் துறை தடை செய்யப் பட்ட அருவிப் பகுதில்தான் இருந்தான்.

"எல்லோரும் குளிக்கிற அறிவில நாமளும் குளிச்சா என்னதுக்கு ஆறது.நமக்குன்னு தனி அருவி மேல இருக்கு. போகலாம்"

குஷியாகி விட்டார்கள் .

பத்தாவது நிமிடத்தில் நண்பன் அவதரித்தான். போத்தல்களுடனும்
இன்ன பிற இத்தியாதிகளுடனும் வனத் துறை அலுவலகத்தை கடந்து மேலே சென்ற போது திருப்பூர் நண்பர்கள் நம்ப முடியாமல் என்னைப் பார்த்த போது மெளனமாக மனதுக்குள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

இறங்கி ஓடி வரும் நீருக்கு எதிர்த் திசையாக மேல் ஏறிச் சென்றோம்.வசதியான இடம் வந்தவுடன் நீருக்கு நடுவே அமர்ந்து இயற்கையின் எழிலில் என் காவல் துறை நண்பனை மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு போத்தல்களைத் திறக்க ஆரம்பித்தோம்.பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு உரையாடல் தொடர்ந்தது.

யார் யார் எவ்வளவு அடிப்போம் என்று ஆரம்பித்து இன்றைய சினிமாக்களின் நிலை, நடிகைகளின் அங்கங்களின் நீள,அகல மற்றும் கன பரிமாணங்களின் வழியாகப் பிரயாணித்து , அரசியலில் அவர் அவர்கள் நிலைப் பாடு குறித்து-அப்புறமாக அவர் அவர்கள் அந்த விசயத்தில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பார்கள் என்பதாய்ப் பயணித்து -

எப்போது எப்படி மண்ணுளிப் பாம்பில் வந்து மையம் கொண்டது என்பது மப்பில் மறந்து விட்டது.
காவல் துறை நண்பனுக்கு "கார்த்திக்' என்று பெயர் வைத்துக் கொள்வோம்.காரணம் 'கோகுலத்தில் சீதை'ரிஷி போல வாழ்க்கை நடத்துபவன்.

கார்த்திக் ஆரம்பித்தான்.

"ஒரு நாள் நல்ல மப்பப் போட்டுட்டு ஹை வெய்ஸ் டுட்டில படுத்துக் கிடந்தேன். ஒரு ஸ்கார்பியோ வேகமா வந்துச்சு.நிப்பாட்டி ஹாரன் அடிச்சான் . துபபாக்கியைத் தூக்கிக்கிட்டு போனேன். சும்மா பின்னால தொறந்து காமினு சொன்னேன். ஒருத்தன் இறங்கி ஒரு நூறு ரூவாக் கட்டை நீட்டினான். என்னடா 'எங்கோ உதைக்குதேன்னு' பின்னாடி தொற இல்ல சுட்டுப் புடுவேன்னேன்.ஆனா பய புள்ளை தொறக்காம இன்னொரு கட்டை நீட்டுது.அப்படி என்னதான் பின்னால வெச்சு இருக்கான்னு பாக்கணும்னு 'ஏல தொறக்கியா இல்லை எல்லாப் போலிசேயும் எழுப்பவா படவா ராஸ்கல்'னு சொன்னதும் பயந்துக்கிட்டு பின்னால தொறந்தான். ஒரு பெரிய சாக்கு அதுல என்னமோ நெளியுது.அது பக்கத்துல அடிச்சுப் போட்ட ஒரு மிளா.

"என்னல அது"

"மண்ணுளிப் பாம்பு"

அப்பத்தான் பேப்பர்ல அரசல் புரசலா படிச்சது ஞாபகம் வந்துது. நான் அது வரைக்கும் நம்பலை.

"ஏல இதக் கொண்டு போய் என்னல பண்ணுவே"

"அது எல்லாம் எனக்குத் தெரியாது. இதைக் கொண்டு குடுத்தா லச்சக் கணக்குல கோடிக் கணக்குல சைசுக்கு தக்க மாதிரி பணம் கிடைக்கும்.ஏதோ மருந்து பண்ணுதாங்கனு சொல்லுதாங்க.'சோலி' பாக்கையில வீரியம் கூடதுக்குனு சொல்லுதாங்க வெளி நாட்டுக் காரன் ஏதோ மருந்து பண்ணுதான்னு சொல்லுதாங்க. உங்க பங்கை வாங்கிக்கிட்டு விட்டுருங்க ஏட்டையா."

'ஏல செருக்கி பிள்ளை எவன்ல ஏட்டையா. கண்ணு என்ன புடரிலவா இருக்கு.அப்பதான் நான் சப் இன்ஸ்பெக்டர்னு பாத்தான் ."

(அடப் பாவி எனக்கு எங்க ஊர்ல சைசுக்கு தக்கன காசு கொடுக்கும் கோகிலா மாமிதான் நினைவுக்கு வந்தாள்.)

சரி மேட்டர் பெரிசா இருக்குனு " ஏல உன்னய் விட்டுருதேன். ஆனா இதுல உள்ள சூட்சுமம் எல்லாம் சொல்லிட்டுப் போல"

கேக்க கேக்க அசந்துபுட்டேன்.

மண்ணுளிப் பாம்பு எதா இருந்தாலும் துட்டுதான். ஆனா சைஸு நீள நீள துட்டு ஜாஸ்தி ஆகும். அஞ்சு அடிப் பாம்பு இத்தனை கிலோக்கு மேலான ரெண்டு கோடி. நாலு அடி இத்தனை கிலோனா ஒரு கோடி, சின்னத்துக்கு லச்சம் இப்படின்னு கணக்கு இருக்காம்.அதுல பல கைக்கு பங்கு இருக்காம்.மண்ணுளி மட்டும் இல்லை கருப்புப் பூனை, எறும்பு தின்னி, பாலாமை இப்படி நிறைய ஐட்டங்கள் இருக்காம். அதுலையும் பாலாமைக்கு பத்து விரலுக்கு மேல இருந்தா தனி ரேட்டாம்.இப்படி அடிக்கிட்டே போறான்.

பேசாம உத்தியோகத்தை விட்டுட்டு பாம்பு பிடிக்கப் போலாங்கிற அளவுக்குப் பேசிட்டான்.

"ஏல....இவ்வளவு சம்பாதிக்க... ஒரு நாப்பதாயிரம் வெட்டு. நான் எல்லாப் போலிசியும் எழுப்பினா துட்டு கூடும்லே .."உடனே தந்துட்டான்.எக்ஸ்ட்ராவா பாதி மிளாக் கறியும் தந்தான்.கூடவே செல் நம்பரும் தந்து எப்போ எங்கன மண்ணுளியைக் கண்டாலும் போன் போடச் சொல்லி இருக்கான். தூங்கின போலிசுக்கு எல்லாம் மிளாக் கறியை பிரிச்சுக் கொடுத்திட்டு துட்டை ஆட்டையைப் போட்டுட்டேன். "

சுவராஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்த எனக்கு தலை சுற்றியது போத்தலின் உள்ளே இருந்த சரக்காலா இல்லை வெளியே வழிந்து கொண்டு இருந்த மண்ணுளிப் பாம்பின் மகாத்மியத்தாலா எனப் புரியவில்லை .

மறுபடியும் " கொமாரு " என்று என்னை கூப்பிட்டு "நேத்து போதைல வீடு வரைக்கும் போக முடியல. ..............(ஊரின் பெயர்) வரைதான் வண்டிய ஓட்ட முடிஞ்சுது. அங்க நமக்கு ஒரு செட் அப் இருக்கு.அவ பெரிய கை காரி. புருஷன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனவ. போதைல போய் ராத்திரி ஒரு "போடு" ( இது வேற போடு ) போட்டேன்.காலயில எந்திருச்சு கிளம்பைல " என்ன நீர் மாட்டு வந்து உசுப்பேத்தி விட்டு போறீரு.ராத்திரி வேற நீரு டைட்டா இருந்ததால அவ்வளவு விசேசம் இல்லை. இப்போ ஒரு இழுப்பு இழுத்துட்டு போரும்.'னு சொன்னாளா .....விடிகாலையில ஒரு இழுப்பு இழுத்துட்டுதான் வந்தேன்" என்று என் வயிற்று எரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.
அவ்வளவுதான் அவர் அவர்கள் மண்ணுளிப் பாம்பு பற்றி சொன்னதைக் கே ட்டு முடிக்கும் பொழுது 'மண்ணுளிப் பாம்பு' பற்றிய குறைந்த பட்ச அறிவு உடையவனாய் நான்தான் காட்சி அளித்தேன். கிட்டத்தட்ட மண்ணுளிப் பாம்பு பாடத்தில் 'மக்காய் மண்டுவாய் ' உணர்ந்தேன்.

சரி நாமும் நமக்குத் தெரிந்த நாம் கேள்விப் பட்டதை சொல்வோம் என "கார்த்திக் , நம்ம சின்ன அண்ணாமலை அதுதாண்டே அந்தக் களவாணிப் பய ...இப்போது தாலி அக்கது,கத்தி
தூக்கது, கன்னக் கோல் வைக்கது, பூட்டு உடைக்கது எல்லாச் சோலியையும் விட்டுட்டு சாக்கைத் தூக்கிட்டு அலையுதான். ஏலே என்ன இப்பிடி அலையுதே அப்படினு கேட்டதுக்கு இப்ப இதுலதான் நல்ல துட்டு புரளுதுங்கான்.ஊர்ல அவன் பின்னால ஒரு கூட்டமே சாக்கைத் தூக்கிட்டு அலையுது."
சரி நம்ம திருப்பூர் கும்பலுக்குப் புதியதாய் இருக்கும் என்று எண்ணினால் அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள்.

"என்ன சுரேஷ் உங்க நண்பர் சொல்லுறது எல்லாம் சரிதான் ..ஆனா விலையைக் குறைச்சு இல்லே சொல்ராரு...இங்க இவ்வளவு சீப்பாவா இருக்கு விலை ......" என்று பங்குச் சந்தை ரேஞ்சுக்கு ஒருவர் ஆரம்பித்தார்.

கார்த்திக் "திருப்பூர் காஸ்ட்லி சிட்டி இல்லயா ..அதுனால அங்க பாம்பு விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும்".

எனக்குத் தெரிந்து ரெண்டு பொருளாதார மேதைகள் உரையாடிக் கொண்டு இருப்பது போலவும் நான் பார்வையாளன் போலவும் உணர்ந்தேன்.அவர்கள் அதற்குப் பிறகு என்னை ஒரு 'மண் புழு' ரேஞ்சுக்கு கூட மதிக்கத் தயார் இல்லாமல் உரையாடலைத் தொடர்ந்தனர்.

நான் " ஏம்பா குளிக்கப் போக வேண்டாமா " என்றேன் ஈனஸ்வரத்தில்.யாரும் கவனித்ததாய் தெரிய வில்லை.இதற்கு இடையில் திருப்பூர் நண்பர் ஒருவரும் , கார்த்திக்கும் சற்று தள்ளிச் சென்று ஏதோ குசுகுசுத்துக் கொண்டனர்.மற்ற இருவரும் இன்னொரு பக்கமாகச் சென்று பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது போத்தல்கள் காலியாகி விட்டதால் நான் கார்த்திக்கிடம் சொன்னேன்." அது எல்லாம் அரை மணி நேரம் முன்னாலே ஆர்டர் பண்ணி ஆச்சு .. இன்னும் நிறைய பேச வேண்டிருக்குல்லா.."

அப்போதுதான் நான் தப்பி தவறி ஏதோ கம்பெனி மீட்டிங்கை மாறுதலுக்காக வனப் பகுதியில் நடத்தும்போது வந்து மாட்டிக் கொண்ட உணர்வு எனக்கு.

சரக்கு சற்று நேரத்தில் வந்தது. கொண்டு வந்தவன் ஒரு லாரியில் கிளீனராக வேலை பார்ப்பவன். எனக்கும் அறிமுகம் ஆனவன்.அவனையும் சரக்கையும் கண்டு சற்று ஆறுதல் அடைந்தேன்.தனிமைத் தவத்தில் இருந்து விடு படலாம் என்ற ஆவல்தான்.

இதற்கிடையில் மற்ற நண்பர்கள் இடையே பேச்சு உச்ச கட்டம் அடைந்து உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது.

"அண்ணே ...நீங்க பாம்பப் பிடிச்சாலும் சரி நான் பாம்பை பிடிச்சாலும் ஒருதருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டு தான் விக்கணும் ...ரெண்டு பார்ட்டில எந்த பார்ட்டி அதிகம் துட்டு தாரணு பாக்கணும் ....அவிங்க அவிங்க கமிஷன் அவிங்க அவிங்களுக்கு....நாம முழு மூச்சா இறங்கினோமுனா சுளுவா பல 'சி'க்களைப் பாத்ரலாம் ". இது திருப்பூர் நண்பர்.

(அடப் பாவி எப்போடா இவங்க அண்ணன் தம்பியா மாறினாங்கனு தெரியலை......)

"தம்பி....'சி'ன்னா என்ன .............." இது கார்த்திக் அவர்களை.

"'சி' ன்னா கோடி அண்ணே "

சரக்கு கொண்டு வந்த 'தொப்புளான்' இவர்களின் பேச்சைக் கவனித்து
" என்ன சமாச்சாரம் அண்ணே "
" இது எல்லாம் பெரிய மேட்டர்டா தம்பி ..நீ போய் கட்டிங்கைக் காலி பண்ணு " இது கார்த்திக்.

"இல்லை அண்ணே .. நம்ம கைலயும் சரக்கு இருக்குண்ணா.......மண்ணுளிப் பாம்பு மேட்டர்தானே "

அதிர்ந்து விட்டேன். அவன் பள்ளி பக்கமே ஒதுங்காதவன்.

மற்றவர்கள் உடனே அவனை "இங்க வா ...சொல்லு " என்று வர வேற்ற விதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வரும் கம்பனிகளை அரசாங்கம் வர வேற்ற தோரணையில் இருந்தது.

இரவில் என் மணமான நண்பர்கள் பேசி விட்டு நேரம் ஆனதும் "தேரம் ஆச்சு ...பொண்டாட்டி வீட்ல தனியாக இருக்கும்னு " சொல்லிச் சென்ற போன பிறகு தனி மரமாய் 'தன் கையே' தனக்கு உதவி என்ற நிலையில் இருந்தேன்.

தொப்புளான் " அண்ணே .. என் கூட ஒரு பய வண்டில ஓடுதான்... அவன் வீட்டுத் தோட்டத்துல ஒரு பாம்பு எங் கால் தண்டிக்கு ஒன்னு கிடக்காம்.அவனுக்கும் இந்த விசயம் அரசால் புரசலா தெரிஞ்சு ஒரு நாளைக்கு பிடிச்சு விக்கப் போய் இருக்கான் .. ஆனா விளக்கமா ஆளுங்களைத் தெரியலை .. போலிசு பயம் வேற... திரும்பத் தோட்டத்துல கொண்டு வந்து விட்டான்.."

"எந்த ஊர்ல இருக்கானு டக்குனு சொல்லு ...இல்லை போனை போடு .." கார்த்திக் பரபரத்தான்.

"உங்கிட்ட சொல்லி எவ்வளவு நாளாச்சு " இது திருப்பூர் ' பாம்புத் தொழில் அதிபர்.
தொப்புளான் " இப்போதான் ஒரு வாரம் இருக்கும்".

"ஒன் வீக்கா..யாரவது தட்டிட்டுப் போய் இருக்காப்ல " இது இன்னொரு திருப்பூர் கள இயக்குனர்.

" என் போன்ல துட்டு இல்லணே" தொப்புளான் சொன்ன உடன் நான்கைந்து அலை பேசிகள் அவன் பக்கம் பறந்தன.
அவன் முயற்சித்து விட்டு "சிக்னல் இல்லண்ணே "

"ஷிட் ...ஹில் ஏரியால வந்து இந்த மேட்டர் வந்து மாட்டுது பாரு....ஏர் டேல் இல்லைனா வோடா போன்ல ட்ரை பண்ணு...."

எனக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.நான் பங்குச் சந்தையில் கூட இவ்வளவு வேகம் பார்த்தது இல்லை.

தொப்புளான் நாலா திசையிலும் சென்று முயற்சி செய்து பார்த்து சோர்ந்தவனாய் வந்தான் .

"கவலை படாதே அண்ணே ... மலையை விட்டு இறங்கினதும் புடிச்சுருவூம்...இல்லை நான் நைட் தஞ்சாவூருக்கு பஸ்ல ஒரு நடை போய்ட்டு வந்துறேதேம்..."

எனக்கு யாருக்காவது அருவிக்கு வந்து உள்ளோம் .குளிக்க வேண்டும் என்ற பிரக்ஞை இருக்கிறதா என்று தெரிய வில்லை.நான் இதைக் கேட்டால் 'உனக்கு எல்லாம் பிசினெஸ் தெரியாது ...வாயை மூடிக் கொண்டு கிட ..' என்று பதில் வரும் எனத் தேறும் ஆதலால் வாயைத் திறக்க வில்லை.

'போங்கடா நீங்களும் உங்க மண்ணுளிப் பாம்புகளும் ' என்று ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன் . அவர்களிடையே கருத்துகளும் , விவாதங்களும் ,பிசினெஸ் பற்றிய திட்டங்களும் ஓடிக் கொண்டே இருந்தன போத்தல்களைப் போல.


பின் குறிப்பு - எனக்கு போதை ஆகி விட்டது .அப்போதும் மனதில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.ஊரில் 'சிங்கத்திடம்' ( பெயர் காரணம் அவன் பெயர் அஜித் ........அவனை அழைக்கும் நண்பர் 'விஜய்' ரசிகர் என்பதால் அஜித் என்ற பெயரை உச்சரிக்க
.விரும்பதாலால் ) சொல்ல வேண்டும்.......இனிமே இரவில் திண்ணையிலோ இல்லை மண்டபத்திலோ படுக்காதே 'மண்ணுளிப் பாம்புனு' பய புள்ளைங்க அறுத்திட்டுப் போயிடப் போறாங்க.

Saturday, December 12, 2009

இரசீது


காலை கண்
விழிக்கையில்
கட்டில் காலிலும்
உள்ளாடையின் ஓரத்திலும்
கண்ணில் பட்ட
நேற்று இரவு
வந்தவளின்
துப்பட்டாவின்
ஜரிகை இழைகள்
பெற்றுக் கொண்ட பணத்திற்கு
நன்றியுடன்
வைத்து விட்ட
இரசீது போலத்
தோன்றியது.

வாசம்

வாசம்

பைக்கில்
பயணிக்கையில்
சிக்னலில் நின்ற போது
கடந்து சென்ற அவளின்
தேக வாசம்
இருபது கிலோ மீட்டர்
என்னுடன் பயணித்து
என் படுக்கை அறை
வரைக்கும் வந்தது
எப்படி என
எனக்கு
இன்று வரை
புரியவில்லை.