Total Pageviews

Thursday, July 31, 2008

பிறன்மனை

"நீ சொல்லுவது எல்லாம் பிறன் மனைவிகளைப் பற்றியதாய் உள்ளதே என்பதுதான் என் தயக்கம்."என்றேன் அவனிடம்.

" மூடனே அவர்கள் எல்லாம் என்னுடைய முன்னாள் காதலிகள். நாங்கள் கிட்டத்தட்டக் கணவன் மனைவி போன்று வாழ்ந்தவர்கள். நீ குற்றம் சாட்ட வேண்டும் என்றால் இப்போதைய கணவன்மார்களைத்தான் சொல்ல வேண்டும்." இது அவன்.

" அதோடு நாங்க எல்லாம் சின்ன வயதிலியே 'கம்பராமாயணம்' படித்து வளர்ந்தவர்கள்" என்று கிட்டத் தட்ட ‘வடிவேலு’ பாணியில் கூறினான்."அதன்படி நடக்கவும் செய்கிறோம்".

ஆச்சர்யத்துடன் "கம்பர் அப்படி என்ன சொல்லி வைத்து விட்டு சென்று உள்ளார்?" என்றேன்.

" பிறன்மனை நோக்கப் பேராண்மை வேண்டும்".ஒரு கணம் அதிர்ந்து விட்டேன்.

" அடப் பாவி அது பிறன் மனை நோக்காப் பேராண்மை வேண்டும்".

" கம்பர் கால்வாங்கு விஷயங்களில் 'வீக்' என்பது உனக்குத் தெரியாது"

என் குறிப்பு-
அவனுக்குத் தமிழ் சரியாகப் படிக்கத் தெரியாது என எனக்குத் தெரியும். அதற்காக அது அவனது வாழ்க்கையில் இப்படி விளையாடும் என எண்ணவில்லை.

Monday, July 21, 2008

எலியால் வந்த கிலிக்கு எதிர்வினை கள்.

எலியால் வந்த கிலிக்கு எதிர்வினை கள்.

கோவை நண்பர் படித்து விட்டு எழதியதை அப்படியே "அவனுக்கு" பார்வர்ட்
செய்தேன். அந்த விவரம் இதோ."ஏனய்யா , காட்பரீஸ் மாதிரி இருக்கும்னு எழுதினால் எவளாவது ஒருத்தி அதெப்படி மூத்திரவாடை அடிக்கும் அது இவனுக்கு மட்டும் காட்பரீஸ் சாக்லெட் ஆக இருக்கும்னு நினைச்சு, என்னதான்னு இருக்குன்னு பார்த்திருவோம்னு வருவாள்னு நாக்கை தொங்கப் போட்டுக்கினு இருக்கீகளா ?". அவனது பதில் இதோ."தொஙகப் போட்டு இருப்பது என்னவோ நிஜம்தான்..ஆனா நீங்க சொல்ற மாதிரி நாக்கை இல்லை.."

நான் இந்த வாக்கு வாதத்தில் பங்கு கொள்ள விரும்பவில்லை.ஆனால் எனக்கு ஒரு சின்ன ஆச்சர்யம் மட்டும்தான். இந்த " வரலாற்றுப் புகழ் நிகழ்வில் " மூத்திர வாடையைப் பற்றி சிந்தித்து உள்ளாரே என்பதுதான்.அவருக்கு சந்தேகம் தீர வழி உள்ளது. பேசாமல் " பில் கிளிண்டனுக்கு" வாய்ப் புணர்ச்சி" செய்ததாக பரபரப்பாகப் பேசப் பட்ட பெண்ணிடமோ , இல்லை சமீபமாக டெல்லியில் ஒரு சக மாணவனுக்கு " வாய்ப் புணர்ச்சி" சாகசம் செய்த ("புளூ டூத்", internet உதவியால் உலகமெங்கும் அறிய முடிந்தது) மாணவியிடமோதான் கேட்க வேண்டும். இல்லையேல் ஏதேனும் சிறை வாசிகளிடமோ,
( ' நீஉன் பின் புறம் தந்தால் என் வாய் உனக்கு', என்பது அடிக்கடி அஙகு புழங்கும் வாக்கியம். அல்லது vice versa), சென்னையில் பூங்காக்களில் ( அதற்கெனவே தனி இடங்கள் உள்ளன) " வாய்ப் புணர்ச்சி" செய்பவர்களிடமோதான் கேட்க வேண்டும்.
**********************************************************************************************************************************
பங்களூரு நண்பர் ஒருவர் ‘பதிவு நன்றாக, விறுவிறுப்பாக இருந்தது.ஆனால், காட்பரீஸ்தான் கொஞ்சம் ஓவர்’ என்றார். அதை அவனிடம் கூறினேன்.அவன் " என்னோடது கொஞ்ச ஓவர் சைஸ்தான், ஆனா அவருக்கு எப்படித் தெரியும? என்று பதில் சொன்னான்.
===============================================================================
எனக்கு காரைக்குடியில் படித்த போது ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சீனிவாசன். நீண்ட நாட்களாக தொடர்பு இல்லை.ஆனால் எனது மெய்லிங் லிஸ்டில் அவரது மின் அஞ்சல் முகவரியும் இருந்ததால் என் எல்லா மெய்ல்களையும் அவர் பெறும் வாய்ப்பு உண்டு. அவருக்கு வாசிக்கும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் வெகு ஜனப் பத்திரிகை படிப்பது அவரது வழக்கம். என்னுடிய வலைப்பூவின் தொடர்பை அவரும் பார்த்துப் படித்து விட்டு எனக்கு போன் செய்தார் பல வருடங்களுக்குப் பிறகு.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு " நீயும் எழத ஆரம்பித்து விட்டாயா?" எனக் கேட்டார்.

" ஆமாம்"

" செக்ஸ் கதை எல்லாம் எழுதுகிறாய் போல உள்ளதே?"

"அடப் பாவி அப்படியா தோன்றியது? அவனிடம் சொல்கிறேன்"

"நீ 'முன்னால்' பால குமாரனைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்தாய். இப்போது என்னன்னா குறி, காட்பரீஸ்னு அசிங்கமாக எழுதுகிறாய்?"

" மன்னிக்கவும்.நான் அவனுடிய அனுபவங்களை எனது வலைப்பூவில் அனுமதிக்கிறேன்.'நான் அவன் இல்லை'. அவன் யாரைப் படிக்கிறான் என்றும் எனக்குத் தெரியாது."

" அது சரி நிலை இப்போது யாரைப் படிக்கிறாய்?"

" சாருவை"

" அது யார்?'. வலைத் தள தொடர்பைக் கொடுத்தேன்.
*****************************************************************************************************************************
ஒரு இரண்டு நாட்கள் இருக்கும். மறுபடியும் அன்பரிடமிருந்து போன் வந்தது.

" என்னப்பா இது இப்போதான் நீ எப்படிக் கெட்டுப் போனாய் என்று தெரிகிறது. ஒரு 'காப்பி' எடுத்து நம்ம ஊரில் காட்டினால் ஒரு பய பொண் கொடுக்கமாட்டான் தெரியுமோ இல்லயோ?"

" 'நான் அவன் இல்லை'.அவன் வேறு நான் வேறு.'கடவுளும் நானும்' , "உலக இசையினூடாக ஒரு பயணம் எல்லாம் கண்ணில் பட வில்லயா?"

" எப்படியோ ஊரை ஏமாத்து" உரையாடல் இப்படியாக முடிந்தது.
**********************************************************************************************************************************

இரண்டு நிமிடங்களில் மீண்டும் அலை பேசி அழைத்தது.நம்புங்கள் இரண்டு நிமிடம்தான். எண்ணைப் பார்த்தேன்.அவர்தான்.

இப்போது குற்றம் சாட்டும் தொனி போய், சிறிது தயக்கத்துடன் " உண்மையிலேயே அந்தக் "குறி சுவைத்தல்' உண்மையான விழயம்தானா இல்லை ”பெப்’புக்காக எழுதப் பட்டதா?'

" திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.' நான் அவன் இல்லை'.வேண்டும் என்றால் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்".

" சரி. கோபப் படாதே. எனக்குத் தெரியும் நீதான் அவன் என" என மறுபடியும் கோபப் படுத்தினார்.

" சரி சரி, உன் அனுபவத்தை சொல்லேன்."

"நண்பரே நான் இன்னும் பிரம்மச்சாரி. மறந்து விடாதீர்".

" அடேய் கள்ளா . சின்ன வயதிலியே உன் சிருங்கார லீலைகளை நான் நன்றாக அறிவேன்.என் வீட்டுக்கு வந்த என் சொந்தக் காரப் பெண்ணைச் சுற்றி வந்த கதை தெரியும்.அவளும் உன் மேல் பிரேமையாய் இருந்ததை அறிவேன்."

" சரி. எனக்குத் தெரிந்த வரையில் அது நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் சாதாரணப் பெண்ணோ, மனைவியோ சம்மதிப்பார்களா என்று தெரியாது. நீர்தான் திருமணம் முடிந்தவர் ஆயிற்றே. பின் என்ன தயக்கம். முயற்சி பண்ணிப் பாருமே."

" அதற்குத்தான் நான் உன்னை அழைத்தேன்".ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போய் விட்டேன். அவருக்கு வயது ஒரு அம்பதுக்கு மேலே இருக்கும்.

" என்ன உளறுகிறீர்? நான் உமக்கும் பண்ணி விடச் சொல்கிறீரா? இல்லை என்னை உம் மனைவியிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறீரா?"

" அது இல்லை.எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளாக இருக்கு. ஆனால் இது வரைக்கும் இது எல்லாம் சும்மா ஒரு இதுக்குச் சொல்றாங்கன்னு நினைத்து விட்டேன்."( எத்தனை இது? )

" சரி ஐயா, பேசாமல் உன் மனவியிடமே கேட்டு விடுமே" .

" அங்குதான் இடிக்கிறது'

" இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே ஐயா. பின் எது எது இடிக்கிறது. அதுவும் இந்த வார்த்தை அவங்க இல்லை சொல்லணும்"

" இல்லை. கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளுக்கு அப்புறமா இதை நான் கேட்டேன் என்றால்,' எப்படி ஒய் உமக்கு இப்போது தெரிந்தது? அப்படி என்றால் இப்போது உமக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்குத் தொடர்பு உள்ளதா? இல்லை ஏதேனும், அந்த மாதிரிப் படம் இன்னும் பார்க்கிறிறா? பொண்ணு வயசுக்கு வந்துட்டா மனசுல இருக்கோன்னோ. இல்லை எந்தக் கருமாந்தரம் பிடிச்சவன் சொல்லித் தரானோ அந்த கருமாந்தரம் பிடிச்சவன் கட்டையில போக?' என்று ஆரம்பித்தால் தினசரி ராத்திரிச் சாப்பாடு கூடக் 'கட்' ஆகும் வாய்ப்பு உள்ளது.( அவர் சாப்பிடும் சாப்பாட்டைத்தான் சொல்லி இருப்பார் என எண்ணுகிறேன்.)

" ஐயா அப்படி என்றால் இன்னொரு வழி உள்ளது. நீர் ஒரு ஐட்டமிடம்தான் போக வேண்டும் இந்த வயதில்".

" ஈஸ்வரா".என்றார்.

" ஆளை விடும்" என்று அலை பேசியை துண்டித்தேன்.

என் குறிப்பு-சாரு சில சமயம் தமிழ் வாசகர்களை, வாசிப்புத் தன்மையை, போலி மதிப்பீடுகளை பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் " கொஞ்சம் ஓவரா இவர் பண்ணுகிறாரோ" என எண்ணுவேன்.இல்லை சாருவின் மதிப்பீடுகள் 500% உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Monday, July 14, 2008

கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை


கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை

முன் குறிப்பு
1) இந்த முன் குறிப்பும்,பின் குறிப்பும் மட்டுமே என்னுடைய பங்களிப்பு. மற்ற எல்லாம் 'கதை சொல்லி' சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு தவளை இருந்ததாம். அதுக்கு அஞ்சாறு குட்டித் தவளைங்களாம்.அந்த ஊர்ல ஒரு அழகான குளம் இருந்துதாம். அதுலதான் பெரும்பாலும் இந்தத் தவளைக் குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்துதாம்.அந்தக் குளத்திலே தண்ணி இனிச்சுக் கொட்டுமாம்.அந்த ஊர்ல குளிக்க, துவைக்க,வீட்டுக்கு தண்ணி 'மோள' எல்லாமே அந்தக் குளத்துலதான்.நல்ல மனசுக்காரங்க மட்டும்” வவ்வாத் தோப்பில” கொல்லைக்கு இருந்துட்டு,பக்கத்து “ செம்பேத்து மடையில ” குண்டிகளுவுவானுங்க.சில கூறு கெட்ட கூமுட்டைங்க அதையும் இந்தக் குளத்திலே பண்ணுவானுங்க.

ஊருல முக்கா வாசிப் பேரு அந்தக் குளத்துல தான் மேல சொன்ன காரியங்களப் பண்ண வருவாங்க.அந்தக் குளத்துப் பக்கத்தில ஒரு ஒசரமான மருத மரம் இருந்தது. அந்தக் குளத்து ஒரு கரையில சிவன் கோயிலும், மறு கரையில பெருமாள் கோயிலும் இருந்தது. நடுவில “ சுப்ப மொட்டை” பாலம் பாதி இடிஞ்சு இருந்தது. அனேகமா நாலு இல்ல அஞ்சுவீட்டுக்குப் பின்னால “ படித்துறை “ உண்டு.விளங்காத ” மக்கா ” மாருங்க பாதி நேரம் குளத்துலதான் கிடப்பாங்க. குதிக்க வசதியா சறுக்கு ஒவ்வொரு படித்தொறையிலும் இருக்கும்.அந்த மருத மரம் ஏறிக் குதிக்கப் ”பார்ட்டிகள்” உண்டு.பொதுவா சூரியன் உச்சிக்கு வருதக்கு முன்னாடி ஒரு பதினோறு மணிவாக்கில கொமரிப் பொண்ணுங்களும், கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாள் ஆன பொம்பளைங்களும் வருவாங்க. அப்பக் களை கட்டும் பாருங்க. இள வட்டப் பசங்க அந்த நீச்சல், அந்தப் பாய்ச்சல் அப்படினு.அந்தத் தவளைங்க அவனுக இருக்க பக்கமே பயத்துல தலை வைக்காது.

சிவன் கோவில் கரையில் இருந்து பெருமா கோவில் கரைக்கு நீச்சப் போட்டி நடக்கும்.கெதி உள்ளவன் ஒரே ' தம்' கட்டி பெருமா கோவில் கரைக்குப் போயிருவான்.கொஞ்சம் திவங்கினவன் “ சுப்ப மொட்டை பாலத்துல ” ஒக்காந்து அப்புறமாப் போவான்.சீத்துவம் செத்தவன் அந்தப் பாலத்தோட திரும்பிருவான்.ஆனா எவன் ஒரே மூச்சுல பெருமா கோவிலுக்குப் போறானோ அவனுக்குத்தான் பொட்டப்புள்ளைங்க ஓரப் பார்வை கிடைக்கும். நடுவுல ஒக்காந்து போன பயபுள்ளைகளுக்கு ரெண்டாம் எடந்தான். பாதியில திரும்பி வந்த பய புள்ளைகளுக்கு 'டெப்பாசிட்டு' போன கதைதான்.மருத மரத்துல ஏறிக் குதிக்கதுல இன்னொரு சமாச்சாரமும் இருக்கு.தடுப்புக்கு அங்கன பாவாடைய மாரு வரைக் கட்டிக் குளிக்க பொம்பளைகளைப் பாக்கலாம்.அவுக வாழத் தண்டு தொடையப் பாக்கலாம். அப்புறமா சாவகாசமா “ மண்டபத்தில் ஒக்காந்து எவளுக்கு எது எது எங்கன எங்கன எப்படி எப்படி இருந்துது" அப்படினு நீட்டி நீட்டிப் பேசலாம். அப்புறமா எவ எவ பாயக் கொண்டாந்து அலசினாங்கிரதை வெச்சு எவ வீட்டுல முந்தின நாள் ‘ கப்ளிங் கச்சேரி’ நடந்துதுனு கண்டு பிடிக்கலாம்.

( ”சரிவே என்னா கத சொல்லுதேரு எங்கன ஆரம்பிச்சீரு? தவளையை எங்கன?”

பயபுள்ள ஒளுங்கா கவனிக்கியளானு பாத்தேன்)

ஒரு நாளைக்கு அந்த சின்னத் தவளைங்க எல்லாம் அம்மா தவளைக்கு “ கடுக்கா” கொடுத்திட்டு குளத்துல தள்ளிப் போய் விளையாடப் போயிருச்சு.வழியில கேட்கப் பட்ட “ தூரமா போதிய?” கேள்விக்கு எல்லாம் “ நாங்க பொம்பளைப் படித்தொறைக்குப் போறோம்”னு சந்தோசமா பதில் சொல்லிச்சு. அப்படியே பொம்பளை குளிக்க படித்தொறை பக்கமாப் போய் விளையாடிது.ரொம்ப நேரம் கழிச்சு உள்ளதிலே பெரிய அண்ணன் தவளை சுத்தி முத்தும் பாக்கையில மூணு தவளைக் குஞ்சுகளைக் காணலை . பரிதவிச்சுப் போச்சு. வீட்டுக்குப் போனா ' ஆத்தா தவளை விளக்குமாத்தை எடுத்து விளாசிப் புடுவாளே'னு பயந்து கடைக்குட்டியுடன் வீட்டுக்கு வந்துச்சு. வாசலுல “ காளி” கணக்கா நின்னுக்கிட்டு” எங்கன போய்த் தொலஞ்சிய..கூறு கெட்ட மூதியளா” னு ரெண்டு போடு போட்டா..அப்பத்தான் கவனிச்சுது மூணு ' கோட்ட்டாங்'களக் காணலின்னு.

“ அந்தக் கூறு கெட்ட கோட்டாங்களை எங்கன ?”

பயத்துல அந்த ரெண்டும் “ ஆத்தா எங்க கூட விளையாடிக்கிட்டி இருந்துச்சு..ஆனா திடீர்னு கண்ணுக்கு தப்பிச்சிருச்சு” சொல்லவும், தாய்த் தவளை ஆரம்பிச்ச ”ஏச்சுமழை ” ஓயவேல்ல.தாய்த் தவளை குட்டிங்க சொன்ன எடம், சொல்லாத எடம் எல்லாம் தேடிப் பாத்து( நீந்திப் பாத்தோ?) சாயங்காலமா வெறுமனே திரும்பி வெசனத்தோட வந்துது.
===============================================
மறு நாளைக்கா சூரியன் உச்சி தாண்டினோன , ‘சவக்களையோட’ தொலஞ்சு போன அந்தத் தவக்களைங்க வந்துது. அதுகளக் கண்டோனதான் தாய்த் தவளைக்கும், மத்தக் குட்டித் தவளைகளுக்கும் உயிரே வந்துது.

தாய்த் தவளை "ராப்போதுவீட்டுக்கு வராமெ எங்கனெ போய் மேஞ்சுட்டு வாரிய?"

மூணு தவளையில மூத்தது “அம்மா விளையாடிகிட்டு இருக்கயில திடீருன்னு பாம்பு வாற மாதிரி சத்தம் கேட்டுது.அப்படியே பயந்து ஓடினோம். ஒரு எடத்துல பாத்தா அப்படி ஒரு பெரிய ரெண்டு தூணப் பாத்தோம் எதுக்க எதுக்கெ. அத்தாம் பெரிய , அத்தாந் தண்டி பாத்ததே இல்லை.நான் சொன்னேன் திரும்பிப் போயிரல்லாம்னு.இவந்தான் தூணுக்குப் பின்னாலெ கொஞ்சம் தள்ளிப் போய்ப் ஒளியாலாம்னான். சரி பயத்தோட போனோம். தூணுக்கு கட்டக்கடைசில ஒரே இருட்டு. அப்புறமா ஒரே புதர் கணக்கா மண்டிக் கிடந்துது. சரின்னு பாத்தா பாம்புசத்தம் பக்கத்துல வார மாதிரி இருந்துது. பயத்துல புதர் பின்னாடி ஒரு 'கொகை' இருந்தது. அதுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டோம். ஆனா ஆழத்தில போய் மாட்டிக்கிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா நாங்க இருந்த கொகை அதிர ஆரம்பிச்சுது.அப்புறமா அந்தக் கொகையே நகந்து போக ஆரம்பிச்சுது. பயத்துல அளுகையே வந்துருச்சு. எப்படித் தப்பிக்கணுமனு தெரியலை. பயத்துலயும், பசியிலயும் தூங்கிப் போயிட்டோம். திடீருனு பாத்தா கொகையத் திறக்கிற மாதிரி ஒரு சத்தம். சரி தப்பிச்சு வெளிய போயிருவ்வோம்னு பாத்தா....கொகை வாசலை அடைச்சிக்கிட்டு ஒரு பெரிய பாம்பு ,' அன கோண்டா' மாதிரி,எங்களை முழுங்க வாயைத் திறந்த்துக்கிட்டு,யம்மா பயத்துல மயக்கமே வந்துருச்சு. நாங்க தப்பிக்க இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி போயிட்டோம். அதுவும் எப்படியாவது உள்ள வந்து எங்களைப் பிடிக்கணும்னு பாத்துது. ஆனா அது முழு உடம்பும் உள்ள வர முடியல. அது பின்னால பின்னால போய் மறு படியும் முன்னால வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துது. கடைசி வர நாங்க எட்டியே நின்னுக்கிட்டோம். கடைசில கோவத்துல விஷத்தக் கக்கிக் கொல்லப் பாத்துது. ”

அம்மாத் தவளை ஆச்சர்யத்துடனும், பயத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தது.

“ சரி .. கொஞ்ச நேரம்”அரவம்” இல்லாம இருந்துச்சு. சரி ஓடியாந்துரலாம்னு பாத்தா மறுபடியும் இன்னோரு பாம்பு. முதப் பாம்பு போய் அனுப்பிச்சிருக்குனு நினைக்கேன். இது அதை விடக் கொஞ்சம் தண்டி சாஸ்தி.அதே மாதிரி இதுவும் உள்ள வரப் பாத்து எங்கள எட்டி எட்டிப் பிடிக்க வந்து முடியா ம கடைசியா விஷத்தைக் கக்கிட்டுப் போய்ருச்சு.இப்படி அதுங்க சொந்தம் அஞ்சு பேரு வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துக் கொல்லப் பாத்தாங்க. கடைசி வரை முடியல”

“ அப்புறம் எப்படித்தான் தப்பிச்சு வந்தீங்க?”

“ ரொம்ப நேரம் கழிச்சு மறு படியும்கொகை நகருத மாதிரியும் , எங்களை யாரோ தூக்கிக்கிட்டுப் போற மாதிரியும் இருந்துச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம குளம் வந்த மாதிரி தோணிச்சு.தண்ணிச் சத்தம் கேட்டுச்சு. என்ன வந்தாலும் பரவாய் இல்லை.. இப்பம் எப்படியாவது தப்பிச்சிரணும்னு கொகை வாசலைப் பாத்தா தொறந்து இருந்தது. எந்த “அரவமும்” இல்ல. தொப்புனு கொகை வாசல்ல இருந்து குதிச்சோம். பாத்தா நம்ம குளம். ஓடி நம்ம வீட்டுக்கு வந்துட்டோம்”

தாய்த் தவளை ” எந்தத் தவளை பிடிக்கறதோ உங்களைப் பிடிச்சுக்கிட்டுப் போய்ருக்கு. யாரு செஞ்ச புண்ணியமோ பத்திரமாத் திரும்பி வந்துட்டீங் க...இனிமே அங்க எல்லாம் போகாதே”னு அதுங்களைக் கட்டிக்கிடுத்து.

பின் குறிப்பு-

1) கதை புரியாதவர்களுக்கான குறிப்பு- முதல் நாளும், இரண்டாம் நாளும் அந்த நேரத்தில் வந்து குளித்தவள் அந்த ஊரின் மிகப் பிசியான விபச்சாரம் செய்யும் “ ஷகீலா “ போன்ற தோற்றம் உடைய ஒரு பெண்.


2) அவள் இரண்டாம் நாள் குளித்து முடிந்து செல்கையில் “நேத்திக்கு குளிக்க வந்ததிலே இருந்து அடி வயத்துக்கு கீள குறு குறுனு இருந்தது இன்னிக்கு குளிச்ச அப்புறமா சரியாயிருச்சு” என்று மு ணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.

3) இந்தக் குறிப்புகளுடன் மறுபடியும் படித்துப் பார்க்கவும்.

4) இன்னும் புரியாதவர்கள் என்னை மன்னிக்கவும் இதை எழுதியதற்காக.

Monday, July 7, 2008

எலியால் வந்த கிலி

எலியால் வந்த கிலி

அவன் அலுவலகம் முடிந்து வந்து முகம் கழுவ குளியலறைக்குச் சென் றான்.முகம் முழுவதும் சோப்பு அப்பிய நிலையில் திடீரென ஒரு சத்தம் கேட்டு அவசர அவசரமாக தண்ணீர் விட்டு முகம் அலசினான்.முழித்த அவன் முன்னால் அந்த அதிர்ச்சி காத்து இருந்தது. ஒரு பெரிய...இல்லை மிகப் பெரிய எலி குளியலறையில் இருந்து தண்ணீர் செல்லும் பொருட்டு வைத்து இருக்கும் குழாயின் மேற்பரப்பில் இருக்கும் மூடியை உந்தித் தள்ளி அந்தக் குழாயின் அத்தனை அழுக்கோடும் ஒரு முறை உடலைச் சிலிர்த்துக் கொண்டது.அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் பயத்தில் உறைந்து போய் ஒரு முக்கு ஓரமாக ஒதுங்கி நின்றான். அதைக் கடந்துதான் ஹாலுக்குப் போக வேண்டும். அது வந்த காட்சி க்ராபிக்ஸ் இல்லாமலேயே ஆங்கிலப் படம் பார்த்த மாதிரி இருந்தது.

அதைப் பெரிய எலி என்பதை விடப் ”பெருச்சாளி” என்று அழைக்கலாம். அந்தப் ”பெருச்சாளி” ஒரு நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தது.அவனுக்குத் தலை மேலே அவனை அவன் முன்னோர்கள் அழைப்பது போல் ஒரு உணர்வு. அந்த ஜந்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது. அவ்வளவுதான்..அலறினான் பாருங்கள்...அந்த அலறலில் அந்த ஜந்துவே பயந்து போய் மறு படியும் வந்த வழியே சென்றது.கண்டம் கடக்க வேண்டி இருக்கும் என ஜோஸ்யன் சொன்னது ஆசியாக் கண்டம் கழிந்து அமெரிக்கா போவோம் என எண்ணியது எவ்வளவு பிசகு என்று புரிந்தது. ஒரு வாளியில் நீர் நிரப்பி அந்த hole மீது வைத்து ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
============================================

இதற்கிடையில் அவனுக்குச் சுண்டெலி என்றாலே பயம்.பயம் என்றால் சாதரணமான பயம் கிடையாது.”தெனாலி” கமல் மாதிரி “ எலி என்றா ல் பயம்..எலி வால் என்றால் இன்னும் பயம்.. சுண்டெலி என்றால் இன்னும் பயம்...” என்ற ரீதியில் பேசுவான். மும்பை வந்து மூன்று வருடம் கழித்து எலிப் பயம் வரும் எனக் கனவிலும் எண்ணவில்லை.

ஆனாலும் நிஜத்தில் வந்தது. திடீரென சின்னச் சின்ன எலிகள் அவன் வீட்டில் ஓட ஆரம்பித்தன. பயத்தின் காரணமாக அவன் அந்த எலிகளுக்கு எந்தத் தொ ல்லையும் செய்வது இல்லை. இதன் காரணமாகவோ இல்லை அந்த எலிகள் எவரிடமோ “ பதினாறும் பெற்று வாழ்க “ என வாழ்த்துப் பெற்றதாலோ பல்கிப் பெருகின. அவனது ஆடைகள் அவைகளுக்கு” கக்கா “ போகவும், அவனுடைய பீ ரோ அந்தப்புரமாகவும் மாறின. அவன் இப்போது எல்லாம் பீரோவைத் தட்டாமல் திறப்பதே இல்லை. ஏன் எனில் எந்த நேரம் என்ன கலவிக் காட்சி கண்ணில் பட்டுத் தொலையுமோ என்று தெரியாது.மேலும் அவன் சாஸ்திர , ஜோஸ்ய விஷயங்களை நம்பும் வழக்கம் உடையவன் ஆதலால், ஒரு வேளை நாம் அதன் கலவிக்கு இடைஞ்சல் செய்து , அவை அடுத்த பிறவியில் அவனாகப் பிறந்து அவன் அவைகளாகப் பிறந்து அவனின் கலவிப் பொழுதில் இடைஞ்சல் செய்தால் என்ன செய்வது என்ற ஒரு முன் எச்சரிக்கையும் கூட. அவனுக்கு எலியை அடிப்பதில் பயம் இருந்ததால் அவைகளுடன் எச்சரிக்கை யாக வாழத்தொடங்கி விட்டான்.

இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன் படுத்தி அவனது பீரோவை அந்தப்புரம் ஆ க்கி ஏகப்பட்ட இனப்பெருக்கம் செய்து விட்டன. எங்கு நோக்கினும்" எலி ராஜ்ஜியம்தான்”. ஒரே உல்லலாதான்.

அவன் ஒரு “ வான் ஹுசைன்” கால் சட்டை வாங்கி அணியாமல் ( விலை ரூபாய் 2900) , அதை என்றாவது ஒரு பிகரைப் பிக் அப் செய்யும் அன்று அணியும் எண்ணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வைத்து இருந்தான்.அதில் விளையாடி விட்டது எலிகள். அதைப் பாழ் பண்ணியதில் கூட கோவம் அதிகம் இல்லை.ஒரு வேளை அதன் மூலம் இனி எனக்கு பிகர் யோகமே இல்லையோ என ஒரு கேலி தென்பட்டதால் "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்ற நிலைக்கு வந்தான்.

அது சரி கூடு வாங்கி வைக்கலாம் எனப் பார்த்தால் பாதி எலிகள் ‘ குஞ்சு குளு வான்களாய் ” இருந்தன.வெளியே வந்து விடும். ஏதாவது மருந்து வாங்கி வைக்கலாம் என்று பார்த்தால் எங்கேனும் செத்துத் தொலைத்தால் வீடே நாறும் அபாயம் உள்ளது.( ஏற்கெனவே “ கக்கா ”வாசம் தாங்க முடியவில்லை.) எலி அடிக்க "அவுட் சோர்ஸ்" பண்ணுவதாய் முடிவு செய்து ஒரு ஆளை வரவழைத்தேன்."அவுட் சோர்ஸ்" காரன்( சுருக்கமாக osp) போட்ட நிபந்தனைகளுள் சில- “ சார் நீ என்னா பண்றே….மார்க்கெட் போய் நல்ல பெரிசு ஒண்ணு சிறுசு ஒண்ணுனு கொம்பு வாங்கி வை…..அப்புறமா உன் பக்கத்து வீட்டு ஐயரைத் துணைக்கு கூப்பிட்டு வை......சாயங்காலமா ஆபிஸூக்கு ஒன் அவர் பெர்மிஷன் போட்டுரு..”. நிறுத்தியவன் “ எனக்கு எலியைப் பிடிச்சோன களைப்பா இருக்கும், ரெண்டு பீரைப் பிடிச்ச்சுக்குனு வந்துரு”.

விதியே என்று எல்லாம் செய்து தொலைத்தேன்.பக்கத்து வீட்டு ஐயர் மன திற்குள்’ இவன் வீட்டு எலிக்கு நாம ஏன் பெர்மிஷன் போடணும்னு ” நினைத்து இருக்க வாய்ப்பு உண்டு.அந்த சுப வேளையும் வந்தது.மாலை ஆறு மணி அளவில் வந்தான்.இருப்பதே ஒரு ஹாலும் ஒரு சமையல் அறையும் ஒரு குளியலறையும்தான். ஏதோ கிரிக்கெட் அணித் தலைவர் மைதானத்தைப் பார்ப்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான்.பிறகு “ நான் ஏன் இந்த நேரத்துக்கு வரச் சொன்னேன் தெரியுமா ?” என்று கேட்டு எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.” எலிங்க எல்லாம் இன்னேரம்தான் டயர்டா இருக்கும்” என்று சொல்லி எங்களைத் திகைப்பில் ஆழ்த்தினான்.(மேட்சுக்கான strategy போ
லத் தோன்றியது). பிறகு என்னை ஒரு பீரோவுக்கு ஒரு புறம் ஒரு கொம்புடனும், மாமாவை சோபாக்கு அருகிலும் நிற்க வைத்தான்.( fielding set up?) மாமா கையில் விளக்குமாறு. பீரோவைத் திறந்து உடன் மூன்று குட்டி எலிகள் osp மேல் தாவிக் கீழே குதித்து ஒன்று சோபா அடியிலும், ஒன்று டிவி ஸ்டாண்ட் அடியிலும்,ஒன்று சமையல் அறைக்கும் ஓடியது.Ospயோ காற்றில் கொம்பை இந்தியன் மட்டை வீச்சாளர்கள் போல் வீசிக் கொண்டு இருந்தான். வழ்க்கம் போல் ஒரு அடி கூட எலியின் மேல் விழவில்லை. இவ்வளவு இழுத்துச் சொல்லும் அளவுக்கு ஹால் ஒன்றும் பெரிசு இல்லை. ஒரு 100-125 சதுர அடி மட்டுமே இருக்கும். இந்த அளவு அறையில் மூன்று பேரும் எ லிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடியதில் மாமாவுக்கு வேட்டி அவிழவும் ‘ என் ஆட்டம் அவ்வளவுதான்” என hurt retired ஆனார். கடைசியில் அவர்களது அணி க்கும், எலிகள் அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடிந்தது.Osp இறுதியாகச் சொன்னான்.” நாந்தா அப்பவே சொன்னேன் இல்ல...அதுங்க களை ச்சுத் தூங்கப் போயிருச்சு போல இருக்கு.. நாம தாக சாந்தி செய்யலாம்”.பீர் குடித்து ஆம்லெட்டும், சிக்கன் ரைசும் சாப்பிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் போனான்.இதற்கிடையில் Osp செய்த ஒரே நல்ல காரியம் பொந்துகளைக் கண்டு பிடித்து ஒயிட் சிமெண்ட் வைத்து அடைத்தான் “ இன்னா ப்பா நீ தமாஸா சொல்லுவியே ஒரு சின்னப் பொந்துல இருக்கேன்னு..மெய்யா லுமே அப்படித்தான்” என்ற வருணனையோடு.

காலையில் Osp போகும்போது ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுப் போனான்.” நீ இன்னாப்பா போதையில தூங்கிட்ட...எலிங்க எல்லாம் உன் தொப்பை மேல ஏ றி விளையாடுதுங்க”.

எலியைப் பற்றி அளவுக்கு அதிகமாகப் பேசி விட்டோம். முக்கியமான “ கிலி” விழயத்திற்குப் போக வேண்டி இருப்பதால், அவன் அவனுடைய சொந்த மா வட்டமான “ நெல்லை” யில் இருந்து professtional killers அல்லது அடியாட்க ள் வரவழைத்து ஓரளவு எலிகளை ஒழித்துக்கட்டிய கதையை விவரிக்க விரும்ப வில்லை…
==========================================================================
அதன் முன்னால் அவனுடைய மூன்று விஷயங்களை அறிந்து கொள்வது உசிதம்.

1) ஒரு முறை அவனுடைய குறியைச் சுவைத்து விட்டு அவன் பெண் தோழி சொன்னது” காட்பரீஸ் மாதிரியே நல்லா இருக்கு”. குறியின் அமைப்பை, வண்
ணத்தை,சுவையை இதில் எதை வைத்து அவள் எண்ணத்தைச் சொன்னாள் என அவனுக்குத் தெரியாது.

2)மணிரத்தினத்தின் “ இருவர்" படம் அவனால் மறக்க முடியாத படம். படத்தின் தரத்திற்காக இல்லை.படம் பார்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக.அவனும்(அவன் காதலித்த போது) அவன் காதலியும்,அடிக்கடி திரைப்படம் செல்வது வழக்கம். முக்கியக் காரணம்-இருளில் நீண்ட நேரம் கழிக்க முடியும் என்பதால். ‘இருவர்' படத்துக்கு முதல் நாளே ‘உட்லேண்ட்ஸ்” ( சென்னை) அரங்கில் கூட்டம் இல்லை. வழக்கமாக அவர்கள் "கார்னர் இருக்கை கலாச்சாரவாதிகள்".( கார்னர் இருக்கை எதற்கு என்று கேட்பவர்கள் தயவு செய்து படிப்பதை நிறுத்தி விட்டு cartoon சேனல் பார்க்கப் போங்கள்.) கார்னர் இருக்க்கை வாங்க அவன் வழக்கமாக கடைப்பிடிக்கும் வழி.அவளை டிக்கட் வாங்க அனுப்பி பக்கத்தில் நின்று கொண்டு டிச்கெட் கொடுப்பவரை கெஞ்சும் விதத்தில்பார்க்க வேண்டும். அதிகமான இடத்தில் இது workout ஆகி உள்ளது.அன்று அதற்கு
தேவையே இல்லாமல் போனது.கூட்டமே இல்லாததால் டிக்கெட்வழங்குபவர் B12,B13 இருக்கைக்கான டிக்கெட்களை வழங்கினார்.அந்த இருக்கைகள் கார்னர் இருக்கைகள் இல்லை என்ற போதிலும் அதை விட வசதியானது.( அவர்களுக்கு எந்தத் திரை அரங்கில் எந்த கார்னர் இருக்கைகள் என்ன என்ன வசதிகளுடன் இருக்கும் என அத்துப்படி). B12,B13 இருக்கைகள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து உள்ளே மேல் நோக்கி வரும் வாயிலுக்கு வலதுபுறமாக ஒரு தொட்டி அல்லது குழி போன்ற அமைப்பில் இரண்டே இரண்டு இருக்கை மட்டுமே இருக்கும். மேல் இருக்கையில் இருந்து பார்ப்பவர்கள் கூடத் தலைவரை மட்டுமே பார்க்கமுடியும்.

வழக்கம் போல் "அரங்கக் களி ஆட்டம்" துவங்கியது.முத்தத்தில் துவங்கி, முலை தடவலில் முன்னேறி இறுதியில் அவன் ஜிப்பவிழ்ப்பில் வந்து நின்றது.மேலும் இந்த சம்பவத்தை நேரடி வருணனை செய்யும் உத்தேசம் இல்லை. கிலி விஷயத்திற்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அவள் அவனிடம்சொன்னது-” முதல்ல சுண்டெலி மாதிரிதான் இருக்கு.கைய்ய வைச்ச உடன் பெருச்சாளி மாதிரி ஆய்டுது”.


உபரித் தகவல்-தொடர்ந்து மூன்று நாட்கள்,”சுண்டெலி-பெருச்சாளி” விளை யாட்டுக்காக அதே படத்துக்கு அதே இருக்கை கேட்கவும் டிக்கெட் கவுண்டரில் ஒரு மாதிரியாய்ப் பார்த்ததால் நாலாம் நாள் அரங்கு மாற வேண்டியதாய் ஆகி விட்டது. ஒரு வேளை “மணி"க்குத் தெரிந்து இருந்தால் அவர்களைக் கூப்பிட்டு பாராட்டி இருக்கக் கூடும்.இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்த ஒரே ஜோடி என்பதால்.


3)அவனுக்கு பெரும்பாலும் குறைந்த ஆடையுடன் இருப்பது பிடிக்கும். குறிப்பாகப் படுக்கையில் ( தூங்குகையில்) நிர்வாணமாக அல்லது ஒரு சிறிய துணியுடன் தூங்குவது மிகவும் பிடிக்கும்.

அந்தப் பெருச்சாளி வாளியின் அடிப்பகுதியை முட்டிக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம் அவனின் பயத்தைக் கூட்டியதால் போத்தல் பியரைக் குடித்துத் தூங்கப் போனான்.அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது தீவிரமான உணர்ச்சியுடன்/ எண்ணத்துடன் படுக்கப்போனால் அந்த உணர்ச்சி அல்லது எண்ணம் சம்பந்தமாக அவன் உள் மனம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும்.எவ்வளவு போதையில் இருந்தாலும் கூட.

உள் மனம் இரவு மூன்று மணிவாக்கில் முழித்துக் கொண்டது.ஏற்கனெவே அவனின் குறி "காட்பரீஸாக" எண்ணப் பட்டது. சுண்டெலி பெருச்சாளி ஒப்புமை வேறு.அன்று இரவு பொட்டுத் துணி இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். ஒருவேளை அந்தப் பெருச்சாளி வெளியே வரும் வேளை யில் அவனது குறி "காட்பரீஸாக"த் தோன்றி அதைச் சுவைக்கும் எண்ணம் வந்தால்? இல்லை இன்னொரு பெருச்சாளியாகத் தோன்றி கலவிக்கு அச்சாரம் போட்டால்? இல்லை சுண்டெலி என எண்ணி விளையாட முற்பட்டால்?

படக்கென முழித்துப் பார்த்தான்."கும்பிடப் போன தெய்வம்" குறுக்கே நின்ற மாதிரி குறி நின்று கொண்டு இருந்தது சேதாரம் எதுவும் இல்லாமல்.

பின் குறிப்பு- "அவன் தினமும் அதிகாலையில் அவனது மொபைலில் பதிந்து வைத்து உள்ள ஒரு தெய்வத்தின் தின அபிஷேக, கற்பூர ஆரத்தியிலோ இல்லை அவன் விருப்பமான கடவுளின் படத்திலோ அல்லது குறைந்த பட்சம் உள்ளங் கைகளிலோ கண் முழிப்பது வழக்கம்" என்பது எனக்குத் தெரியும்.
.