Total Pageviews

Thursday, June 19, 2008

லூ

எனக்கு ஏ சி பார் சென்று மது அருந்துவது ரொம்பப்பிடிக்கும்.சாதரணமான மது விற்பனைக் கடைகளிலோ அதன் பார்களிலோ நினைத்துப் பார்க்க முடியாது.ஏன் எனில் டீக்கடையில் உட்கார்ந்து மது அருந்தும் எண்ணம் எனக்கு.அதற்காக நான் ஒன்றும் அந்த அள்வு பணக்காரன் இல்லை.அதன் மந்தஹாச சுகத்திற்கும், நீண்ட நேரம் உட்கார்ந்து அருந்தும் சுகமும் இழக்க முடிடயாத ஒன்று வாழ்க்கையில்.

இன்னொரு காரணமும் உண்டு. நான் கிராமப் புரத்தின் நடுத்தர குடும்பதிலிருந்து வந்தவன் என்பதால் ஏ சி பார் மற்றும் டிஸ்கோ போன்ற விஷயங்கள் எட்டாக்கனவு மாதிரி இருந்தது. ஒரு நாளாவது ஒரு பருவ மங்கையுடன் மது அருந்தி விட வேண்டும் என்பது ஜென்மம் சாபல்யம் அ டை ய ஒரு எ ளிய வழியாகக் கருதினேன்.அதற்காகவும் பெண்கள் மது அருந்தி ஆட்டம் போடும் பார்களாய் வலம் வந்தேன்.( இப்போது எல்லாம் இது ஈஸி ஆகிவிட்டது.)

நகரின் அந்த உயர் மட்ட பெண்களுக்கான பாரில் ஒரு பெண்ணை ப் பார்த்தேன்.இதே ஒரு நாவல் ஆக இருந்தால் அவளைப் பெண் என்று சொல்வதே பாவம்..தேவதை ...மது அருந்தும் ஏஞ்சல்..அப்படி இப்படி என்று வருணிக்கலாம். நாம் மெயின் விஷயத்திற்கு வருவோம்.

வழக்கமாக தினசரி ஒவ்வொருவருடன் வருவாள்.ஒரு முறை வந்தவரின் வயது சுமார் 60 இருக்கும்.ஆனால் நிச்சயமாக விலை மகளாகத்தெரியவில்லை.

அவள் மிகவும் ஹைஃபி என்பது மட்டும் புரிந்தது.தினசரி என் ”நவ துவாரங்களிலும் புகை வரத் துவங்கியது’.( மேற் கோள் இட்ட வார்த்தை என் அன்பு எழுத்தாளரிடம் கடன் வாங்கியது). நாட்கள் செல்லச்செல்ல அவளுடன் ஒரு நாளாவது குடித்து( குடித்து மட்டும்) விட வேண்டும் என்ற ஆசை ப்ரபஞ்சத்தை விடப் பெரியதாய் வளார்ந்து கொண்டே போனது.வேண்டாத தெய்வம் இல்லை.

ஒரு நாள் கடவுள் என் கஷ்டத்தை ப் புரிந்து கொண்டாரோ என்னவோ அந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் பாரின் உள்ளே இருந்ததால் வெளியே வானத்தில் திடீர் என நட்சத்திரங்களும், தூரத்தில் தென்றல் காற்றும், தோன்றியதோ அல்லது வீசியதோ எனக்குத் தெரியாது.ஏன் எனில் நேரம் அப்போது காலை 11.30.

அந்த தேவதை உள்ளே நுழை ந்தாள். கூடவே ஒருவன்.வழக்கத்துக்கு மாறாக என் அருகில் இருந்த டேபிளிள் அமர்ந்தனர்.ஆர்டர் செய்தனர்.கூட இருந்தவனின் மொபைலில் பெல் அடித்தது, ஒரு வேளை என் தினத் தூக்கத்தைக் கெடுக்கும் என் மேன்ஷன் ரூம் மேட் “பழத்தின்” தினசரிகாலை பூஜையின் போது அடிக்கும் மணி ஓசையால்வந்த புண்ணியமாகக் கூட இருக்கலாம்.( இவ்வளவு நீள வாக்கியம் தேவையா?)

இதற்குள் அவர்ளுக்குள் குசுகுசு எனப் பேச்சு.சிறிய வாக்குவாதம் எனவும் கூறலாம்.அவன் விடை பெற்றுப்போனான்.தனிமையில் விடப் பட்டாள். என் மனத்தில் நாமாகப் போய் அறிமுகப் படித்திக் கொள்ளலாமா என நினைப்பதற்குள் மொபைலை எடுத்து நம்பர்களைச் சுழற்றத் தொடங்கினாள்.’ஷிட்” என்றும்” பாஸ்டர்ட்” என்று பலவாறாகத் திட்டியபடியே கோபமாக போனை வைத்தாள்.

நிமிர்ந்த்வளின் பார்வையில் நான்பட்டேன். நான் வேகமாக வேறு பக்கமாய் திரும்பிக் கொண்டேன். ஆனால் அந்த நேரம்தான் என் ஜாதகத்தில் “ விபரீத ராஜ யோகம்” தொடங்கும் எனக் காலையில் தொலைக் காட்சி சேனல்களின் ஆஸ்தான ஜோதிடரோ இல்லை இந்த வாரம் வார , மாத பத்திரிகை களின் ஜோதிடமோ இல்லை சும்மா ஜோதிடம் பார்க்கிறேன் என்று வந்து கழுத்து அறுக்கும் எட்டாம் நம்பர் ரூம் கிழமோ சொல்லவிலை. .

“ எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரலுக்கு தலை நிமிர்ந்து பார்த்தேன்.அவள்தான்...அவளேதான்....அதுவும் என்னைப் பார்த்து....ராஜ யோகம்தொடங்கி விட்டதோ...அடித்த சரக்கு அத்தனயும் கால் வழியாக பூமிக்குள் வழிவதாய் உணர்ந்தேன்.

ஈனஸ்வரத்தில் ” யெஸ்’ என்றேன்.

“எனக்கு கம்பெனி தர முடியுமா ?இந்த ****** எல்லாரும் ஒரே நேரத்தில்தான் நரகத்திற்கு செல்கிறாற்கள்.” என மொபைல் போன் டூயுனில் அழகான ஆங்கிலத்தில் கேட்டாள். ( இந்த இடத்தில் எந்த உவமையும் எழுதக்கூடாது என முடிவு எடுத்து இருக்கிறேன்.)

“இட் இஸ் மை பிளஷர்”.இடம் மாறினேன்.

ஜென்ம சாபல்யம் இவ்வ ளவு எளிதாய்க் கிட்டும் என எண்ண வில்லை. அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

“ நான் உன்னைக் கவனித்து இருக்கிறேன்.நீ தினமும் என்னைப் பார்த்து விடும் ஜொள் மழையையும் கூட”. நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.” ஜொள் மழையை ஒரு பாருக்கே சர்வ் பண்ணலாமே”. இலவச இணைப்பாக இன்னொரு வாக்கியம்.

“ வெட்கமா...என்ன மனிதன் நீ”. அமைதியாய் இருந்தேன்.

“ ஏன் பியர் சாப்பிடுகிறாய்...ஏற்கனெவே சின்னத் தொப்பை இருக்கிறது உனக்கு”.தொப்பை என்பதற்கு ஆங்கில வார்த்தை உண்டு என்பதை அப்போதுதான் அறிந்தேன்

“ இல்லை . இதுதான் எனக்கு சரியாக வரும்” என்றேன்.

அவள் சியர்ஸ் சொன்னாள்.எனக்கு கை நடுங்கியது. புகைத்தாள். குடித்தாள்.மேசை நாகரிகம் மற்றும் ட்ரிங்கிங் மே னர்ஸ் என என்ன எல்லாமோ இவ ளிடம் கற்றுக் கொள்ளா வேண்டும் என எண்ணினேன். அவளிடம் ‘இதற்குப் பயிற்சி வகுப்புகள் உள்ளதா' எனக் கேட்க நாக்கு வரை வந்த கேள்வியை ஒரு சிப் பீர் குடித்து உள் தள்ளினேன்.. புரை ஏறியது.

“ என்னா மேன் சிறு பிள்ளையாய் இருக்கிறாய்..”

திடீரென இது இன்று ஒரு நாள் கனவாய் போய் விட்டால் எனக் கவலை வந்து விட்டது.

அவள் ‘ நான் லூ சென்று வருகிறேன்” என்று எழுந்தாள்.ஒரு நிமிடம் நின்று “ இவ்வளவு பியர் சாப்பிட்டும் இவ்வளவு நேரமாய் லூ போகாமல் இருக்கிறாய்”. போய் விட்டாள்.அவள் ஆச்சர்யப் பட்டுச் சொ ன்னாளோ இல்லை எனக்கு அந்த நாகரிகம் தெரியவில்லை என்பதாகச் சொன்னாளோ என்பதற்கு எந்த குளூவும் தராமல் சென்று விட்டாள்.

நான் என்னையே நொந்து கொண்டேன். என்ன படித்து என்ன பயன்..என்ன சம்பளம் வாங்கி என்ன பயன்...இது தெரியவில்லையே..சரியான கிரமத்தானாகவே இன்னும் இருக்கிறோம்.என்ன செய்யலாம் என யோசித்த போது” ராஜ யோக த்தைத்தொடர்ந்து, விபரீத யோகமாக என் நண்பன் “ பாச்சிப் பால்” நினைவு வந்தது.( பெயர்க் காரணம்- அவன் பெயரில் நாலு அல்லது ஐந்து பேர் நண்பர் குழாமில் இருந்தார்கள்.) அவன் ஒரு பெரிய பன்னாடுக் கம்பெனியில் பணி புரிவதால் பாதி நாட்கள் பார்ட்டி, எல்லாச் சனி இரவுகளிலும் டிஸ்கோ என இருப்பவன். அவன் போய் வந்து பெண்களுடன் குடித்ததைக் கேட்டுக் கேட்டே என் ஆசை விபரீத வளர்ச்சி அடைந்தது.அவன்தான் சரியான ஆள்.அதோடு நான் ஒரு பெண்ணுடன் மது அருந்துவதையும் சொன்ன மாதிரி இருக்கும் எனக் கால் பண்ணினேன்.

அவன் ”என்ன மதியம் 1 மணிக்கு போன் செய்கிறாய்” .

“ இல்ல மச்சி...ஒரு பிகர் கூட பார்ல இருக்கேன் அதான்”

“ அவள்ட்ட கொடு”

“ இல்ல அவ லூக்குப் போய் இருக்கா..ஆமா லூனா என்னடா”.அவன் மிமிக்ரி செய்வதில் வல்லவன்.மஹாநதி பூர்ணம் விஸ் வநாதன் ஸ்டைலில் “ கிருஷ்ணா....கிருஷ்ணா...அது அந்த பாரில் உள்ள காஃபி ஷாப்டா”

அவள் வந்து விடவும்” நான் அப்புறம் பேசரேண்டா”

அமர்ந்தாள். அப்பாடா என்ற உணர்வு அவள் முகத்தில்.

அப்புறம் சுமார் ஒரு இரண்டு மணி நேரம் குடித்தோம்,பேசினோம்.இதற்கிடையில் அவள் யாரிடமோ போனில் பேசுகையில் சிறு நீர் கழித்து வந்தேன்.

ஆனால் விடாமல் எனக்கு ஒரு எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது. ஆல்கஹாலுடன் எப்படி காஃபி குடிக்கிறாள்...இல்லை ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றால் கூட இங்கேயே ஆர்டர் செய்யலாமே . அதுவும் இல்லாமல் இவ்வளவு நாகரிகம் அறிந்த பெண் ஏன் நம்மை அழைக்கவில்லை.

இதோடு விடாமல் நாளை பழைய பார்ட்டிகள்…வந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கிடையில் வந்த போன்களுக்கு அவள் அன்றைய தினம் கமிட்டட் என்பதாகவோ இல்லை கம்பெனி உடன்
இருப்பதாகவோ பொருள் படும் வகையில் ஆங்கிலதில் ஏதோ பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

என்ன செய்து கவிழ்க்கலாம்.உறவைத் தொடரலாம்.ஏன் எனில் இவளுடன் சில நாட்கள் குடித்து விட்டால் சாவு வந்தால் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற மன நிலைக்குத் தள்ளப் பட்டு இருந்தேன்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து அவளிடம் நான் நாகரிகம் தெரிந்தவனாகவும் அதே சமயத்தில்அவளின் நாகரிகம் அற்ற தன்மையையும் ஒரே சமயத்தில் உணர்த்த விரும்பி அவளிடம் நான் இப்போது லூ போகப் போகிறேன்..உன்னால் கம்பெனி கொடுக்க முடியுமா எனக் கேட்டேன்.( மறுபடியும் நீள வாக்கியம்).

அவள் சிறிது நேரம் கோபம், ஆச்சர்யம், வெறுப்பு இன்னும் என்ன பல உண ர்வுகளடுனோ பார்த்தாள். தசாவதாரம் கமல் ரேஞ்ச்சுக்கு,அல்லது அ ந் நியன் விக்ரம் ரேஞ்ச்சுக்கு.

அதற்குப் பிறகு அவளை அந்த பாரில் நான் பார்க்கவே இல்லை பல மாதங்களுக்குப் பிறகும்.

மா வீரன் நெப்போலியனுக்குப் பல வெற்றிகளுக்குப் பிறகு வாட்டர் லூ வந்தது. என் கன்னி முயற்ச்சியே வாட்லர் லூ ஆகக் காரண ம் என்ன? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பின் குறிப்பு- பின்பு பாச்சிப்பாலிடம்போன் பண்ணிக் கேட்ட போது பாரில் யாரிடமும் குறிப்பாக பார் மேனிடமோ மேனேஜரிடமோ இதை உளறி வைக்காதே..ரெகுலர் கஸ்டமரைக் கெடுத்த பாவத்திற்கு அடித்தே வெளியே அனுப்புவார்கள் என்றான்.