Total Pageviews

Wednesday, December 22, 2010

மழைக்கு முன்னே

மழை
வருமா வராதா என
அறிய முடியாதவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வரும் என
உறுதியாக உணர்ந்தவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வராது என
நம்பியும்
எடுத்து செல்பவர்களின் குடை
அனைத்தையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது
பெய்வோமா
பெய்ய மாட்டோமா என
அறியாத அந்த .மழை.
குடை விற்பவனோ
குடை இல்லாமல் வருபவர்களை
எதிர் நோக்கி இருந்தான்
குடும்பக் கவலையோடு.

Tuesday, December 21, 2010

வழுக்கும் வட்டம்

சில விடையே தெரியாத
கேள்விகள்.
சில கேள்விகளே இல்லாத
விடைகள்.
என்னிடத்தில்
அவ்வப்போது.
குழம்பி இருந்த நான்
இரண்டையும்
பொருத்திப் பார்த்தேன்.
வாழ்கையின்
வழுக்கும் வட்டத்தின்
உள் மையப் புள்ளியை
உணர்வதாய்த் தோன்றியது .

Sunday, June 27, 2010

அண்ணாச்சி குஞ்சு

அண்ணாச்சி அன்று தன் மளிகைக் கடையில் கொஞ்சம் பிசியாகத்தான் இருந்தார்.அப்போது அலை பேசி " நெஞ்சே நெஞ்சே " என்ற பாடலை எதிர் முனைக்கு பாடிக் கொண்டே இங்கு துடித்தது.
" இங்கிட்டு .............மளிகைக் கடல் ஒனேர் ......... அண்ணாச்சி பேசுதேன் அங்கிட்டு யாரு?"
"சூர்யா இருக்காரா?' என்றது அழைத்த அந்தத் தேன் குரல்.( பெண் குரல் எனச் சொல்லத் தேவை இல்லை).

"நீங்க யாரு புள்ளை?"

" ம்ம்.... எங்க அப்பா அம்மா பொண்ணு " என்றது நக்கலாக எதிர் முனையில்.

அண்ணாச்சி அவ்வளவு சீக்கிரமாக பெண்களிடம் அதுவும் இளம் பெண்களிடம் கோபப் பட மாட்டார். எனவே " ஏ புள்ளை காலங் காத்தாலே கிருத்துருவம் பண்ணாதே ..என்ன வேணும் சொல்லு"

மறுபடியும் எதிர் முனையில் " சூர்யா இருக்காரா .நான் அவரோட பிரெண்டு .."

" இங்கன அப்படி யாரும் இல்லை " .

"பின்ன நீங்க ஏன் சூர்யா போன வைச்சு இருக்கீங்க அப்போ அவரு போனை சுட்டுப் புட்டியளோ " என்று மிமிக்ரி செய்தது .

அண்ணாச்சிக்கு திடுக்கென்றது. அவர் 'வைப்பு' சொன்னது என்பதற்காக மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கல்லாவில் இருந்து பணம் எடுத்து வாங்கி வைத்து இருக்கும் " ஹயர் எண்டு" மாடல் போனை எவனோ ஒரு சூர்யாவின் போன் என்றவுடன் ஒரு சிறிய எரிச்சல் ஏற்பட்டது.

" ஏ புள்ளே இது நான் துட்டு போட்டு வாங்கின போன்.."

" சரி அப்போ ஏன் சூர்யா நம்பரை வைச்சு இருங்கீங்க ?"

சிறிது சிறிதாக எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அண்ணாச்சி "நீ யாரு புள்ளை எவன் நம்பெரயோ நான் என்னத்துக்கு வைக்கப் போறேன் ?...இதே வேலையாப் போச்சு ஒரு நாளைக்கு இப்படி அஞ்சாறு பொட்டப் புள்ளைய போன் போட்டுக் கலாயிக்குது.வேற சோலிக் கழுதை கிடையாதா?"

"ஆமா நீரு பெரிய மம்முதக் குஞ்சுன்னு நினைப்போ ?"

அண்ணாச்சி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

" மம்முதக் குஞ்சா இல்லையானு தெரியாது ஆனா மகாப் பெரிய குஞ்சு வைச்சு இருக்கேன் .." பேசி முடிப்பதற்குள் எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

பின் குறிப்பு - போன் செய்த பெண்ணுக்கு அண்ணாச்சியின் தொலை பேசியில் ஒலித்த பாடல் " நெஞ்சே நெஞ்சே" வா இல்லை 'குஞ்சே குஞ்சே' வா எனத் தோன்றிய சந்தேகம் பற்றி கடைசி வரையில் அண்ணாச்சிக்கு தெரியாமலே போய் விட்டது.

Thursday, June 17, 2010

நீள் சதுரம்

நீள்சதுரத்திற்குள்

எத்தனயோ குட்டி

வட்டங்களைப் பொருத்திப்

பார்த்து விட்டேன்

இன்னும் வெறுமை

உள்ளது

என் மனதைப் போலவே.

மௌனம்

இருவருக்கும் இடையிலான

இந்த நீண்ட மௌனம்

என்னை வதைக்கிறது

என்று குற்றம் சாட்டினாய்

இந்த வேளையில்

நீயும் மௌனமாய்

இருந்ததை

அறிந்தா அறியாமலா?

Thursday, June 10, 2010

மொழிப் பிரச்சினை

அழைத்துக் கொண்டு வந்த

' அவளிடம் 'படு' என்றேன்.

அவள் ஏதோ ஒரு

பாடலை முணுமுணுக்கத்

தொடங்கினாள்.

தமிழ் கொஞ்சமே தெரிந்த

அந்தத் தெலுங்குப் பெண்ணை

அழைத்து வந்தது

அறியாமையோ எனத் தோன்றியது

நிர்வாணம்

அலைபேசியில் அழைத்து
'என்ன செய்கிறாய்? என்றாள்.
'ஆடைகளை உடுக்கப்
போகிறேன்' என்றேன்.
'என்ன நிலை?' என்றாள்.
"முழு நிர்வாணம்" என்றேன்.
'உடை உடலுக்குச் சுமை'
என்றேன் சலிப்புடன்.
'நிர்வாணம் பரிசுத்தம்'
என்றாள் சிலிர்ப்புடன்.
படுக்கையில் என்னை
எப்போதும் வெல்லும் அவள்
இன்று உடுக்கையிலும்.

Sunday, June 6, 2010

கேயாஸ் தியரி

நீ ஒரு வண்ணத்துப்பூச்சி.

நான் ஒரு சுனாமி.

கேயாஸ் தியரி

தெரியுமா கண்ணே?

உன் பெயர்

பூக்களின் பொதுக்குழு

போர்க்களம் ஆனது

உனது பெயரைத்

தன் பெயராய்

யார் சூடிக்

கொள்வதென.