Total Pageviews

Friday, October 17, 2008

***** கொண்டு இருக்கிறேன் ....போனை வையடா....புண்ணாக்கே.

கிரெடிட் கார்டு வாங்கும் போது இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் என் நாவில் இருந்து எழும் எனக் கனவில் கூட எண்ணியது இல்லை.என்னிடம் பல வங்கிகளின் கடன் அட்டைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஒரு குறிப்பிட்ட அட்டைக்கு குறிப்பிட்ட நாளுக்குள் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த முடியவில்லை.

சிறிய வறுமையான சூழல். சரி அடுத்த மாதம் சேர்த்துக் கட்டி விடலாம் என இருந்து விட்டேன்.இந்தக் கவனக் குறைவு மூன்று மாதம் சென்றதால் இந்த அளவு போகும் என்று எண்ணவில்லை.

அன்று வழக்கம் போலவே காலை 7.15க்கு கிளம்பிப் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன்.வழக்கமாக நான் என் மொபைலை 'வைப்ரேஷன் மோடில்' போட்டு விடுவேன் பயணிக்கும் பொழுது. மேலும் எவரது போனையும் எடுப்பதும் கிடையாது. அன்று பை இல்லாத சட்டை அணிந்து இருந்தேன்.எனவே மொபைலைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்து இருந்தேன். வண்டி கிளம்பிப் பத்து நிமிடத்தில் எல்லாம் அதிர்வுடன் மொபைல் ஒரு 'எலி' மாதிரி நகரத் தொடங்கியது.தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு அதிர்ந்தது. அது இருந்த இடம் அப்படி என்பதால் குளிரில் 'காலையிலேயே' வேறு மாதிரியான உணர்வுகளைத் தூண்டியது. வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்திப் பேசினேன்.

“ மிஸ்டர் ................?”

“ யெஸ்”

”......வங்கியில் இருந்து பேசுகிறோம். தாங்களின் குறைந்த பட்ச திருப்பிச் செலுத்தும் தொகை கடந்த சில மாதங்களாக வரவில்லை.. எங்களுடைய வங்கி ஆளை இன்று அனுப்பிக் கலெக்ட் செய்து கொள்ளவா?”

“இன்று நான் வெளியூரில் இருக்கிறேன்.இரண்டு நாட்கள் வருவதற்கு ஆகும்.” இன்னும் இரண்டு நாட்கள் தள்ளிப் போடலாம் என்ற எண்ணத்தில்.

“ சரி. இரண்டு நாட்கள் கழித்துக் கூப்பிடுகிறேன்”.
இதற்கிடையில் என் மேல் சேற்றை வாரி இரைத்து விட்டுச் சென்றது ஒரு லாரி.
---------------------------------------------------------------------------------------------
இப்படியாகச் சில நாட்கள் சமாளித்து விட்டேன்.இதற்கிடையில் அந்த வங்கியின் எண்களைப் பெயருடன் எனது மொபைலில் சேகரம் செய்து விட்டேன். அதன்பின் அந்த எண்களில் இருந்து 'கால்' வந்தால் எடுக்காமல் சமாளித்து வந்தேன்.அப்படி எல்லாம் என்னை சும்மா விட்டால் நான் ஏன் இந்தப் பதிவை எழுதப் போகிறேன்?


அந்தச் சக பெண் பணியாளர் மிகவும் அழகானவர்.'அழகான உடை அணிந்து வரும் தினம்' போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக முதல் பரிசு வாங்கி வருபவள். அலுவலகத்தில் அனைவரது கனவிலும் குறைந்தது ஒரு முறையாவது வந்து இருப்பார்.அதில் 30% பேருக்காவது 'சொப்பன ஸ்கலிதம்' நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு.20 % பேர் தங்களது சுய இன்பத் துய்ப்பின் போது இவளைக் காரணமாக எண்ணி இருக்க வாய்ப்பு உண்டு.திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது மனைவியைப் போகிக்கையில் இவளை நினைத்துப் போகித்து இருக்க வாய்ப்பு உண்டு.இதை எல்லாம் எழுதக் காரணம் அவளது அழகை விஸ்தாரமாக விவரிக்கும் பொருட்டே ஒழிய எனக்கு 'போர்னோ' எழுதும் எண்ணமோ, அறிவோ கிடையாது . அலுவலகத்தில் எல்லோரும் அவளுடன் 'கடலையோ,மொக்கையோ, பாவ்பாஜியோ ,பானி பூரியோ போடுவதில் போட்டி போடுவார்கள். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்.( தயவு செய்து என்னைப் பெர்சனலாக அறிந்தவர்கள் ‘கொஞ்சம் கூட கூசாமல் பொய் எழுதுகிறாயே' என்று மின் அஞ்சலோ இல்லை குறுஞ் செய்தியோ அனுப்பாதீர்கள்.).பாருங்கள் எதை எழுதப் போயெதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.அந்த அளவு அவளது அழகு சிந்தனைகளைத் திசை திருப்பக் கூடிய ஆற்றல் உள்ளது என ஒரு முடிவுக்கு வருவோம்.அவள் ஒரு 'டேட்டா' வேண்டி என் இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்து புன்னகைத்தாள்.( இவளைச் சம்போகம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புன்னகையைப் பார்த்துக் கொண்டே செய்ய முடியுமா?அப்போது புன்னகை வருமா?).' நான் டேட்டா கொடுத்தால் நீ டேட்டிங்கிற்கு டேட் கொடுப்பாயா? “ என்று கேட்டு மொழியில் விளையாடமுயற்சி செய்தேன் மனத்திற்குள்தான்.அந்த நேரத்தில் மேசை மேல் உள்ள போன் அடித்தது. அவளிடம் சிரித்துக் கொண்டே போனை எடுத்தேன்.

“.......வங்கியில் இருந்து பேசுகிறோம்” என வழக்கமான பல்லவி ஆரம்பம் ஆகியது.எனக்கோ தர்ம சங்கடமான சூழல்.சில முறை சீட்டுக்கட்டு போல நான் அட்டைகளை வைத்து இருப்பதை அதிசயத்துடன் பார்த்து உள்ளாள்.

“ நான் இப்பொழுது ஒரு மிக முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்.சிறிது நேரம் கழித்து அழைக்க முடியுமா?”

” கடந்த சில தினங்களாக நீங்கள் எங்களது 'கால்களை' அட்டெண்ட் செய்ய மறுக்கிறீர்கள்.எப்பொழுது பணம் கட்டப் போகிறீர்கள்?”

இப்படியாக உரையாடல் தொடர்ந்தது. இதற்குள் தேவதை “ தாங்கள் பிசியாக இருப்பதாக எண்ணுகிறேன். பிறகு வருகிறேன்” என்று கிளம்ப , நானோ 'தேவதை வந்த நேரம்' 'தேள் கொட்டிய நிலையினை' உணர்ந்தேன்.எதிர் முனையிலோ 'பீட்' செய்த ப்ரோக்ராம் போலப் பேசிக் கொண்டே போனான்.
இதில் என்ன பெரிய சிக்கல் என்றால் நான் கட் செய்தாலும் தொடர்ந்த்து தொல்லை கொடுப்பார்கள். எனது அலுவலகத்தின் கடுமையான விதிகளுள் ஒன்று எந்த தொலைபேசியும் மூன்றாம் முறை ஒலிப்பதற்குள் எடுக்க வேண்டும்.


” சரி.இன்னும் இரு தினங்கள் கழித்து ஆள் அனுப்பவும்”.

“ இல்லை. இன்று கடைசி நாள்.கட்டாயம் பணம் கட்டவும். எங்கு வந்து கலெக்ட் செய்ய? வீட்டிலா...அலுவலகத்திலா?எந்த நேரம் வரட்டும்?”
இதற்குள் தேவதை சிரித்த நமட்டுச் சிரிப்பு என் நிலைமை அவளுக்குத் தெரிந்து விட்டதோ எனக் கவலை வரவும் கோபம் உச்சிக்கு ஏற எதிர் முனையில் ஏதோ கத்தி விட்டு திரும்பிப் பார்த்தால் தேவதை வைத்து விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் “ மெயில் பண்ணுகிறேன் ” என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.தேவதைகள் எதன் பொருட்டும் யார் பொருட்டும் காத்து இருப்பதில்லை போலும்!
------------------------------------------------------------------------------------------------
அலுவலக வேலையாக சென்னைக்கும், பெங்களூருவுக்கும் செல்ல வேண்டி வந்தது. சென்னையில் ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்த போது மீண்டும் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. இப்போது எல்லாம் மொபைல் ஒலிக்கத் தொடங்கினாலே ஒரு வித 'போபியா' வரத் தொடங்கி விட்டது.

நல்லவேளை......அந்த வங்கியின் நம்பர் இல்லை.தைரியமாகப் பேசத் தொடங் கினேன்.


ஒரு பெண் குரல். ”மிஸ்டர் .............. ?” .இனித்தது.

“ஆம்”.


“ தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்?”.ரோமிங் சார்ஜ் ஏறும் எனத் தெரிந்தாலும் ”சென்னையில்” என்றேன்.

” தாங்கள் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறீர்கள். இன்றைக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும்.” என்றாள் கடுமையான குரலில்.( இரண்டு வரிகளுக்கு முன்னால் இனித்த குரல் இப்போது வேறு விதமாய்த் இப்போது தோன்றுவது மனித இயல்பினாலா இல்லை உண்மையிலேயே அவளது குரலே மாறி இருந்ததா என்று இனம் அறிய முடியவில்லை.).
நம்பரை மறுபடியும் பார்த்தேன். இந்த முறை வேறு நம்பர்.என் டெக்னிக்கைக் கண்டு பிடித்து விட்டார்கள் போல உள்ளது.

” நான் வெளியூரில் இருப்பதால் வந்த உடன் கட்டுகிறேன்.”


” வாய்ப்பு இல்லை. . உடனடியாக மும்பையில் ஏற்பாடு செய்யுங்கள். இல்லை சென்னையில் இடத்தைத் தெரிவியுங்கள். ஆள் அனுப்புகிறோம்.”

“இன்னும் இரண்டு நாட்களில் நான் மும்பை வந்து விடுவேன்”.

“ இங்கு உங்கள் வீட்டில் மனைவியிடம் ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.” இதை அவள் இந்தியில் சொன்னாள். எனக்கோ இந்தி தெரியாது.இதை தமிழில் மொழி பெயர்த்தால் கொஞ்சம் விவகாரமான பொருள் வரும் போலத் தோன்றியது.

“ என்னிடம் வசூல் பண்ணுவதாக இருந்தால் இரண்டு நாட்கள் பொறுக்க வேண்டும்.இல்லை என் மனைவியிடம்தான் வசூல் செய்ய வேண்டும் என்றால் இரண்டு வாரங்களோ .. இரண்டு மாதங்களோ ... இரண்டு
வருடங்களோ பொறுக்க வேண்டும்.ஏன் எனில் எப்போது திருமணம் செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை .” என்றேன் நக்கலாக.அனேகமாக இந்த வாக்கியம் அவளை லேசாகக் கோபப் படுத்தி இருக்க வேண்டும்.

“ சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் சொல்லுங்கள்.இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஆள் அனுப்பிகிறேன்' என்று தமிழ்ப் பட வில்லன் ரே ஞ்சிற்குப் பேசினாள். கவனமாக விகுதியைப் பார்க்கவும்.

“ வேலை முடிந்ததும் “ மாம்பலம் மஜா ஆண்டி”( இவர் குறித்து விவரம் வேண்டுவோர் தனியாக மின் அஞ்சல் செய்யவும்.) வீட்டுக்குப் போவதாய் இவளிடம் சொல்லலாமா கூடாதா எனப் புரியவில்லை. ஒரு வேளை அங்கு எல்லாமா ஆள் அனுப்புவார்கள்?.கார்ட் அப்ளை செய்யும்போது விண்ணப்பத்தைப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்ட என்னையே நொந்து கொண்டேன்.

இப்படி யோசித்துக் கொண்டு இருக்கையில் “ மிஸ்டர்...உங்களிடம்தான் பேசிக் கொண்டு இருகிறேன்.பதில் சொல்லுங்கள்.” மிரட்டலாய்.எனக்கு சின்னதாய் ஒரு கோபம் வந்தது.

“ மேடம்.. நானோ வெளி ஊரில் இருக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.ரோமிங் சார்ஜ் வேறு ஏறிக் கொண்டே போகிறது.தயவு செய்து நான் மும்பை திரும்பியவுடன் கூப்பிடுங்கள்.”

அவள் மறுபடியும் முதலில் இருந்து 'பின் ஏன் செலவழித்தீர்கள்?பணம் கட்டாமல் விட மாட்டோம்.வீட்டிற்கும் , அலுவலகத்திற்கும் ஆள் அனுப்பி வைப்போம்”என்று நான் கவனிக்கிறேனா இல்லையா என்று தெரியாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். வடிவேலுவுக்கும் சங்கிலி முருகன் அண்ட் கோவிற்கும் ஒரு தமிழ் படத்தில் நடக்கும் காட்சி இங்கே அரங்கேறிக் கொண்டு இருந்தது.

கடைசியாய் ‘உன் உள்கச்சை அளவு என்ன' எனக் கோபத்தில் கேட்டு
மொபைலை அணைத்து விட்டேன்.மண்டைக்குள் கும்முட்டி அடுப்பை ஏற்றியது போல இருந்தது.

மஜா ஆண்டியாவது..மயிராவது.....கடற்கரை கஜாவின் 'சுண்டல் கஞ்சியோ இல்லை ஒரு போத்தல் ரம்மோதான் சரிப்படும் எனக் கிளம்பினேன்.
-------------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் காலையிலே முடிவு செய்து விட்டேன். எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அவளுக்கு நானும் மன உளைச்சலை ஏற்படுத்த ஒரு ‘மாஸ்டர் பிளான்' ரெடி செய்தேன்.

அவளிடம் இருந்து போன் வந்தவுடன், ‘ விஜய்காந்த் ‘ பட அறிமுகப் பாடலை தேவா இசையில் மாணிக்க விநாயகமோ இல்லை நாகூர் ஹனிஃபாவோ பாடுவது போன்ற நிலையில்

‘வாராரு வாராரு
வன்புலியா வாராரு
வேல் எடுத்து வாராரு
வேங்கையாய் வாராரு
பொன்னு பொருள் தாராரு
பூமியில் தலைமகனாரு'

என்று தயார் செய்து வைத்த பாடலை மூச்சு விடாமல் பாட ஆரம்பிக்க
‘பாகல்' என்று கூறி வைத்து விட்டாள்.அன்று முழுவதும் காத்து இருந்தேன் ஏனோ போன் வரவே இல்லை. எனக்குச் சின்ன வருத்தம் என்ன என்றால் என் அனு பல்லவி சரணம் முழுவதைக் கேட்காமல் போய் விட்டாளே என்பதுதான்.
----------------------------------------------------------------------------------------------
ஒரு வழியாக அடுத்த மூன்றாம் நாளில் நடு இரவு விமானத்தில் மும்பை வந்து அடைந்தேன். வழக்கமாக 5.45 அதிகாலை எழும் பழக்கம் உள்ளவன். முந்தைய இரவு காலதாமதமாகத் தூங்கியதால் 6.30 மணி அளவுக்கு கதவு தட்டபடும் சத்தம் கேட்டுத்தான் முழித்தேன். வழக்கமாக குப்பைக்காரிதான் தட்டுவாள். எனவே குப்பை வாளியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.
எதிரே இருவர். வாட்டசாட்டமான ஆகிருதி.புரிந்து விட்டது.


“ பே மெண்ட் டியூ” என்றான் இந்தியில்.

“ ஐயா எனக்கு உங்களிடம் பேசும் அளவில் இந்தி தெரியாது.எனவே பத்து
மணிக்கு நானே உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்கிறேன்' என்றேன் எனத் தமிழில்.அவனோ ‘பே மெண்ட் டியூ நவ்' என்பதைத் தவிர வேறு வார்த்தையே தெரியாது என்பது போல குரலை உயர்த்திக் கொண்டே போனான். அதிகாலை நேரத்தில் அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தனர்.வழக்கம் போலவே என் வீட்டில் முன் தினம் வைத்த பாலை வாங்க வரும் அடுத்தாத்து மாமா கதவைத் திறந்து பார்த்தார். நிலைமையைப் புரிந்து ‘ நான் இன்னிக்கி கடுங் காப்பிதான்' என்று மறு படியும் கதவை தாளிட்டு உள்ளே சென்றார்.( எலி அடிக்கையில் பாதியில் சென்றாரே அதே மாமாதான்).

வந்தவர்களோ ஓரளவு தங்கள் குறிக்கோள் (அக்கம் பக்கத்தில் என்னை அவ்மானப் படுத்தி ஒரு முயற்சி செய்வது) நிறைவேறியதாய் நினைத்து மறுபடியும் ' பே மெண்ட்' பல்லவியை என்னிடம் தொடங்கினர்.நான் கதவை மூடி உள்ளே சென்று விட்டேன். கதவைத் தட்டினர்......இல்லை உடைக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் மாமாவின் ஹீனக் குரலும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. கதவைத் திறந்தேன்.

‘மாமா( வயது அறுபதுக்கு மேல் இருக்கும்) ( அவர் என்னை) (என்ன கொடுமை இது மாமா- இது நான்) அவா எங்கிட்ட பைசா கேக்கறா?'

அவர்கள் ருத்ர தாண்டவம் ஆடியபோது கூட கோபம் வராத நான் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.‘ நீர் கடன் வாங்கி இருக்கேறா?'

‘இல்லை ..எங்காத்துக் கதவைத் தட்டி என் கிட்ட கேக்கறா'

‘பின்ன என்ன மசுத்துக்கு அந்தக் கூதிங்களுக்குப் பதில் சொல்றேர்?உம்ம வேலை மசுரப் பாத்துக்கிட்டுப் பொத்திக்கிட்டுப் போரும்”.

மாமா மயக்கம் போடாத குறைதான். நான் இப்படி எல்லாம் பேசுவேன் எனக் கனவில் கூட எண்ணி இருக்க மாட்டார்.


அந்த வங்கிக் குண்டர்களுக்கு நாங்கள் பேசியது புரியவில்லை. அவர்கள் என்னிடம் என் மனைவியை அழைக்கச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது. என் மனைவி ஊரில் இல்லாதது. அவள் மட்டும் இப்போது இருந்திருந்தால்? வேறு என்ன விவாக ரத்துதான்.‘உங்கள் மனைவியை அழையுங்கள்' மறுபடியும் அவர்கள்.இந்திப் பட வில்லன்களும் தமிழ், தெலுங்கு பட வில்லன்கள் போல பணம் திருப்பித் தர முடியாதவர்களிடம் தமக்கையையோ, தாரத்தையோ வரச் சொல்லி இருப்பார்கள் போல இருக்கிறது. அதை வேறு இந்த வங்கிக் குண்டர்கள் பார்த்துத் தொலைத்து இருப்பார்கள் போல இருக்கிறது.

‘அவர் ஊருக்குச் சென்று உள்ளார்' எனக் கூறி கதவைத் தாளிட்டேன்.அவர்களும் சிறிது நேரத்தில் களப் பணியைச் செவ்வனே செய்த மன நிலையுடன் கிளம்பி விட்டனர். ஆனால் என் மன நிலைதான் என் மனைவியை எண்ணியவுடன்.....அவள் இன்னும் இரு தினத்தில் வர இருக்கிறாள்.....என்ன நடக்கும்? ஒரு வேளை அவள் வருவதற்குள் வீடு மாற்றி விடலாமா? அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காதே? அப்படி மாற்றினாலும் காரணம் கேட்பாளே?சிந்தனையுடன் அலுவலகம் கிளம்பினேன்.

வாசலில் அந்த தேவதை. முகமன் கூறினாள்.

‘ ஏன் முகம் சரி இல்லை?” என்றாள்.

‘என் மனவி ஊரில் இருந்து வருகிறார்கள்'

‘அடப் பாவி மனிதா?”

நான் சொன்ன நிலை வேறு. அவள் புரிந்து கொண்ட நிலை வேறு.
என்ன செய்ய? காலையே இப்படி ஆரம்பிக்கிறது என நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.


வழ்க்கம் போல் அழைப்பு. அதே பல்லவி. மிரட்டல்கள். இத்யாதி இத்யாதிகள்.
நான் ஞானி நிலைக்கு வந்த மாதிரி தோன்றியது.இப்போது எல்லாம் அந்த வங்கிப் பெண் பேச ஆரம்பித்தாலே ‘RP ராஜ நாயஹத்தின்' ‘(rprajanayhem.blogspot.com) விளக்கெண்ணையால் குண்டி கழுவிய உவமை ஞாபகத்திற்கு வரத் தொடங்கி விடுகிறது.

-------------------------------------------------------------------------------------------
மனைவி வரும் நாளும் வந்தது. நான் முன் ஏற்பாடாக விடுப்பு எடுத்து இருந்தேன். இடைப் பட்ட நாட்களில் பிரிவால் உடம்பும், வங்கிக் குண்டர்களால் மண்டையும் காய்ந்து இருந்தது. அதை விட முக்கியமான விஷயம் இந்த கடன் அட்டை விவகாரம் தெரிவதற்குள் 'மேட்டரை முடிந்த அளவு ‘ முடித்துக் கொள்ள வேண்டும் .ஒரு வேளை தெரிந்த பிறகு வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ?


இயற்கையும் உதவி செய்தது. மதிய நேரமே வானம் மப்பும் மந்தாரமாக மாற மழை சுழற்றி அடிக்கத் தொடங்கியது.மனவியும் இயைந்தாள். கிளு கிளுப்பாகத் தொடங்கியது.உதட்டில் முத்தமிட்டு முடித்தவுடன் செல் போன் ‘எமனாய்' ஒலி எழுப்பினான். எந்த வங்கியின் எண்ணும் இல்லை. என் அலுவலக எண்ணும் இல்லை. கை நடுங்கியது. பேசினேன். அந்தக் குண்டர்களேதான். வேறு ஒரு எண்ணில் இருந்து.
ஆரம்பித்தான்.


“அலுவலத்திற்கு அழைத்து இருந்தோம். நீங்கள் வரவில்லை எனச் சொன்னார்கள். எங்கு இருக்கிறீர்கள்?”.

இதற்குள் மனைவி வாகாகப் படுத்துக் கொண்டாள்.

' நான் வீட்டில் முக்கியமான வேலையாக இருக்கிறேன்.”

‘இப்போது ஆள் அனுப்பவா”

ஆடை நெகிழ்த்தினாள்.

“இல்லை நான்தான் சொன்னேனே முக்கியமான வேலை என்று”

'யாரது ?” காலை அகற்றியவாறே என் மனவி கேட்டாள்.

‘பணம் தாரமல் என்ன முக்கியமான வேலை?”

‘புணர்ந்து கொண்டு இருக்கிறேன் போனை வையடா புண்ணாக்கே' . பொறிந்து தள்ளி விட்டு போனையும், மனைவியையும் அணைத்தேன்.

பின் குறிப்பு-
1- அவனுக்கு நான் தமிழில் நான் சொன்னது புரிந்ததோ
இல்லையோ , எனக்கு புரிந்தது கடன் அட்டையில் பாக்கி இருந்தால் மனவியைப் நிம்மதியாகப் புணர முடியாது எனபது.

2 இந்த லட்சணத்தில் என் கோவை நண்பர் ஒருவருக்கும், என்னைப் பத்து வயதில் காதலிக்க ஆரம்பித்து இன்னமும் காதலித்துக் கொண்டு இருக்கும் 'அவளின்' மகனுக்கும் அலை பேசி அன்பளிப்பதாகச் சொல்லி இருந்தேன்.
தினமும் பேசும் கோவை நண்பரிடம் பேசுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டேன் இதனால்.என்னைக் காதலிக்கிற பாவ்த்துக்கு தன் மகனுக்கு தானே வாங்கிக் கொடுத்து விட்டு நான் வாங்கிக் கொடுத்ததாக கூறி விட்டாள். இதில் இருவரும் கேட்ட மாடல் ஒன்று என்பது ஆச்சர்யமான தற்செயல்.


3 நேற்று இதை தட்டச்சு செய்கையில் மராத்தி நண்பர் இந்தword file name ஐ
'புணரும் பூஜாரி'( புணரப் போகிறேன் என்று தமிங்கிலத்தில் இருந்ததை) எனக் கொச்சையாக வாசித்தது வேடிக்கையாகவும், மன நிறைவாகவும் இருந்தது.

ஒரு நிமிடம்.........ஒரு குறுஞ் செய்தி வந்து உள்ளது...வாசித்து விட்டு வருகிறேன்............................................................................................................................................................................................................................................................................................................

CONGRATS YOUR ............... BANK NEW CREDIT CARD APPROVED. என்ன கொடுமை சார் இது நான்தான் apply பண்ணவே இல்லையே.

காமம் ஆதி கடவுள் மீதி


கடவுளா? காமமா?
ஒரு கணத்தில்
சிக்கல் எழுந்தது.
காமத்தையே
கடவுளாகக் கொண்டவரைக்
கண்டுருக்கிறேன்.
கடவுளைக்
காமமாய்க் கண்டவரைக்
கண்டதில்லை.
கடவுள் பேரின்பம்
காமம் சிற்றின்பம் எனில்
கடவுள் பெரிய காமமா?
காமம் சிறிய கடவுளா?
குழம்பித் தவித்துக்
கண்ணுறங்கினேன்.
கனவில் தினமும்
வரும் கடவுள்
அன்று தாமதமாய்
வந்தார்.
தளர்ச்சியாயும் இருந்தார்.
ஏன் என்று
கேட்ட போது
காமத்தால் சிறிது
களைத்திருப்பதைக்
காரணமாய்ச் சொன்னார்.

Friday, October 10, 2008

சொர்க்கத்திற்கு அழைப்பு

'சொர்க்கத்தில் இருக்கிறேன்'
என்றான்
அலை பேசியில்
அழைத்த போது.

ஆச்சர்யமாய்
'அதற்குள்
அமரராய் விட்டாயா
அப்படி ஆயினும்
உனக்கு
அந்த வாய்ப்புக் கிட்டாதே?'
என்றேன்.

‘இல்லை அந்தப் பெயரில்
உனது ஊரில்
ஒரு பாரும்
இல்லையே'
என்றேன்.

இல்லை இது வேறு வழியில்'
என்றான்.
மயக்கத்தில் இருந்தது
அவன் குரல்.

'மது,மயக்கம்,மங்கை,மணம்
இதுவே இங்கு
'.

‘எந்த இணைய தளம்
வழியாகப் பதிவு செய்தாய்?'

'இல்லை இதய தளம்
வழியாக
'

‘கடவுச் சொல் உண்டா?'

காதல் அடிக்கோடு காமம்'

'இப்போது என்ன செய்கிறாய்?'

இடை வேளை'

‘எங்கு அமர்ந்து இருக்கிறாய்?'

அவளின் அகன்ற அடி மடியில்'

‘இந்திரனின் இருக்கை
என்ற எண்ணமா?'

இருக்கலாம்
அவளின் இரு
முலைகளில்
இரு கை
ஊன்றி
இருக்கையில்
அப்படித்தான் தோன்றுகிறது
.'

‘தாகம் எடுத்தால்?'

அவளின் இனிய இதழ்'

‘மோகம் கொண்டால்?'

அவளின் முழு உடல்'

'சரி இடை வேளை
முடிந்தது அடுத்த
ஆட்டத்துக்கு
தயாராகிறேன்
'
எனத் துண்டித்தான்.

அது சரி
அலை பேசி
இணைப்புக் கொடுக்கையில்
சொர்க்கத்திற்கும்
அழைக்க முடியும் என
அவர்கள்
சொல்லவில்லையே!