Total Pageviews

Tuesday, August 26, 2008

இலக்கிய தாகமா இல்லை கொலை வெறியா?ஞாநியின் எழுத்துப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து விளக்குவதற்காக மும்பை நண்பர் ரமணிக்கு போன் செய்தேன்.
எடுத்தவுடன் " புல் டைட்டா?" என்றார்.
" ஐயா நான் மிக மிக அரிதாக மது அருந்துபவன்.அதிலும் பீர் தாண்டாப் பிள்ளை நான்"
" அதுதான் சாருவின் நிகழ்ச்சியில் நடந்ததை ஸ்ரீநிவாசன் எழுதி இருந்தாரே”.
“அதன் பின் சாருவும் எழுதி இருந்தாரே அதைப் படிக்க வில்லையா ? அதுவும் இல்லாமல் உச்சத்திற்கும் போகாமல் கீழேயும் விழாமல் சம நிலையில் இருந்ததை ஸ்ரீநிவாசன் 'FLAT' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார். ”
” அது போகட்டும். மும்பையின் தின வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் சேர்த்து இரு திரட்டாக வெளியிட ஒரு திட்டம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் மும்பை நகரின் 'பார்' கலாச்சாரம் பற்றிய பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.”(பரவாயில்லை. வேறு தலைப்புக் கொடுக்காமல் இருந்தாரே.)
எந்த மாதிரி வர வேண்டும் என ஒரு வடிவம் கொடுத்தார்.”வெறும் புள்ளி விவரங்களாய் இல்லாமல்
விறுவிறுப்பாக இருக்க வேண்டும். அதைப் படிக்கும் ஒவ்வொருவர் கண் முன்னாலும் அந்த 'பார்' கலாச்சாரம் வர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடுத்த முறை மும்பை வருகையில் குடிக்காதவன் கூட பாருக்குச் செல்லும் எண்ணம் தோன்ற வேண்டும். அது உங்களால்தான் முடியும்( இது வேறா?)"
'தலைப்பு சுவராஸ்யமாக உள்ளது. ஆனால் தவறான ஆளை அணுகுதல் அவ்வளவு சுவராஸ்யமாக இல்லையே. மேலும் நான் 'பார்' எல்லாம் சென்றதும் கிடையாது. மேலும் பெண்கள் மற்றும் நடன பார் என்று பெரிய அளவில் விஷயம் உள்ளது. நான் பீரையே வீட்டில் வைத்துக் குடிக்கும் பழக்கம் உடையவன். “
" 'அவன்' மும்பை வந்து இருப்பதாக சொன்னீர்கள் அல்லவா? அவனுடன் தினமும் ஒரு பார் என்ற அளவில் விஜயம் செய்து எழுதுங்கள்."
ரமணி எளிதாகச் சொல்லி விட்டார்.இதில் எத்தனைப் பிரச்சினை உள்ளது என அவர் அறிய மாட்டார்." முதலில் 'அவனை' பாருக்குக் கூட்டிக் கொண்டு போவது என்பது தற்கொலைக்குச் சமம். மேலும் ஏதாவது பெண் வடிவத்தில் ஒருவரைக் கண்டு விட்டால் போதும். முடிந்தது.அப்புறம் எனக்கு இந்தி தெரியாது எனபது வேறு. அப்புறம் செலவு என்ற ஒன்றைச் சிறிதாகக் கணக்குப் போட்டதில் எனக்கு பீர் குடிக்காமல் தலை சுற்றத் தொடங்கியது.
இரண்டு நாட்கள் கழித்து 'பதிவு தயாரா' என்றார்." ஒரு பெண்மணி ஒண்டுக் குடித்தனத்தில் எப்படி 'மாத விடாய்' நாட்களில் காலம் கழித்தார் என்று கூட எழுதி இருக்கிறார் என்றார். நான் மெதுவாக 'மந்த்ராலயாவுக்கு மாலை போட்டு இருப்பதாக'த் தப்பித்துக் கொண்டேன்.
----------------------------------------------------------
பெங்களூர் நண்பர் 'திரு'வுடன் இரவு உரையாடுவது வழக்கம். அவர் அவ்வப்போது நான் மற்றும் பலர் எழுதுவது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒரு நாள் " சூர்யா நான் சில தலைப்புகள் தருகிறேன். எழுத முயற்சி செய்யுங்கள்" என்றார். எனக்கோ பள்ளிப் போட்டிகள் அல்லது பத்திரிகைப் போட்டிகள் நினைவுக்கு வந்தது.மறுபடியும் பேசும்போது என்ன ஆயிற்று என்பார். நான் மறந்து விட்டேன் என்பேன்.
" சரி மடிக் கணினி இதோ உள்ளது. இப்போதே தலைப்புகளை மின் அஞ்சல் செய்கிறேன்."
மாதிரிக்கு சில.
1. 90 டிகிரீ அல்லது எவளுக்காக இந்த 90 டிகிரீ( என் கவிதை கழிசடையாக இருப்பதாக விமர்சனம் செய்யும் நண்பர்கள் அம்பை மறந்து விட்டு 'எய்தவன்' எங்கு உள்ளான் என்று பாருங்கள்.)
2.கன்னி கழியாதவன்.( இதை எழுத எனக்கு முழு தகுதி உண்டு என்றாலும் வார்த்தைகள் இது வரை வசப்பட வில்லை.)
3.குறி...வைத்த குறி.( எனக்கு திரு வைக்கும் குறியா? )
4.மலையிலே ஒரு .....( நான் சின்ன வயதில் இந்த மாதிரி தலைப்பில் ஒரு கதை கூடப் படித்தது இல்லை.)
திரு பேசுவதற்கு சுவராஸ்யமான ஆள் என்றாலும் இப்போது எல்லாம் ஒரு பயம் வந்து விடுகிறது. 'பொல்லாதவன் கருணாஸ்" பாணியில் தலைப்புச் சொல்ல ஆரம்பித்து விடுவாரோ என்று.
==========================================================
என் நீண்ட நாளைய நண்பன் மணி எனக்குப் போட்ட பின்னூட்டம் பாருங்கள். வலைப் பூவுக்கு வாழ்த்தி விட்டு "எல்லாம் படித்து முடித்த பிறகு நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு நிறையக் கெட்ட வார்த்தைகளுக்கும் செக்ஸ் வார்த்தைகளுக்கும் பொருத்தமான வார்த்தைகள் தெரிந்து கொண்டேன்.'அவலும் ( அவள் அல்ல) அங்கிளும்' என்று முன்னால் ஒரு நிகழ்வு சொல்வாயே .அதைப் பதிவு செய்யேன்"
அது கிட்டத்தட்ட ஒரு ‘அஞ்சரைக்குள்ள வண்டி' அளவுக்கு இருக்கும்.
என் குறிப்பு-இவர்களுக்கு இருப்பதெல்லாம் இலக்கிய தாகமா இல்லை என் மீது கொலை வெறியா?.

3 comments:

GURUNATH SHINDE said...

hello sir visit my blog to see gallery from east maharashtra

sreenivasan said...

ஹாய் சூர்யா , இந்த பதிவு மிக நன்றாக இருந்தது.ஸ்வரஸ்யமாக வேகமாக.....keep it up.பதிவின் தலைப்பே ஒரு கேள்வியாக கேட்டிருக்கின்றீர்கள்.இரண்டுமே ஒன்றுதானே!!!!!.

ஸ்ரீநிவாஸன்.

சூர்யா - மும்பை said...

நன்றி ஸ்ரீனி. >இரண்டுமே ஒன்றுதானே!!!!!.< படித்து சிரித்து விட்டேன்.நல்ல நகைச் சுவை உணர்வு உங்களுக்கு.